செய்திகள் இந்தியா
சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக பாஜக அறிவிப்பு
புது டெல்லி:
திருப்பூரை சேர்ந்த மகாராஷ்டிர மாநில ஆளுநரான 68 வயதான சி.பி.ராதாகிருஷ்ணன், துணை குடியரசுத்தலைவர் பதவிக்கு பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
திருப்பூரை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் 1957-ம் ஆண்டு அக். 20-ஆம் தேதி திருப்பூரில் பிறந்தவர். தந்தை பொன்னுச்சாமி. தாய் ஜானகி அம்மாள். மனைவி சுமதி. மகன் ஹரி சஷ்டிவேல். மகள் அபிராமி. இருவருக்கும் திருமணமாகிவிட்டது.
சி.பி.ராதாகிருஷ்ணன் குடும்பம் திருப்பூர் ஷெரீப் காலனியில் வசித்து வருகிறது. வணிக நிர்வாகத்தில் பட்டப்படிப்பை முடித்தவர் சி.பி.ராதாகிருஷ்ணன்.
1974-ம் ஆண்டு பாரதிய ஜனசங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினராக இருந்தார். 1996-ம் ஆண்டு தமிழ்நாடு பாஜக செயலாளராக இருந்தார். பாஜகவில் 1998, 1999 ஆகிய மக்களவைத் தேர்தல்களில் கோவை தொகுதியில் போட்டியிட்டு எம்.பி., ஆனார். கடந்த 40-க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக பாஜகவில் உள்ளார்.
2004-2007-ம் ஆண்டு வரை தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக பதவி வகித்தார். அப்போது கன்னியாகுமரி முதல் சென்னை வரை யாத்திரை மேற்கொண்டார்.
2020-2022-ம் ஆண்டு வரை பாஜகவின் கேரள மாநில பொறுப்பாளராக இருந்தார். 2023-ம் ஆண்டு பிப். மாதம் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
தொடர்ந்து 2024-ம் ஆண்டு மகாராஷ்டிர மாநில ஆளுநராக மாற்றலனார். இந்நிலையில் பாஜகவின் தேசிய ஜனநாய கூட்டணி சார்பில் துணை குடியரசுத்தலைவர் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
