செய்திகள் இந்தியா
கடனுக்கு வாங்கிய லாட்டரி; பேருந்து நடத்துனருக்கு அடித்தது ஜாக்பாட்: கேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு
கல்பெட்டா:
கேரள மாநிலம் கல்பெட்டா பகுதியில் தனியார் பேருந்து ஓட்டுனராக வேலை செய்பவர் ஜெயேஷ் குமார். இவர் கல்பெட்டா புது பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள அம்மா லாட்டரி கடையில் உள்ள ஊழியர்களிடம் 5 தனலட்சுமி லாட்டரி டிக்கெட்டுகளை எடுத்து வைக்கும்படி கூறியுள்ளார்.
அதற்கான பணத்தை பிறகு கொடுப்பதாக கூறியுள்ளார். அதாவது கடனுக்கு லாட்டரி டிக்கெட்டுகளை அவர் வாங்கியுள்ளார். வழமையாக அவர் சீட்டுகளை வாங்குவதால் அவருக்குரிய 5 லாட்டரி டிக்கெட்டுகளை எடுத்து வைத்துள்ளார் கடைக்காரர்.
அதன்படி ஜெயேஷ் குமாருக்கு 5 லாட்டரி டிக்கெட்டுகளை ஊழியர் ஸ்வாதி சத்யன் தனியாக எடுத்து வைத்து விட்டார்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை குலுக்கல் நடைபெற்றது. அதில் ஜெயேஷ் குமாருக்காக எடுத்து வைத்திருந்த 5 டிக்கெட்டுகளில் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.1 கோடி பரிசு விழுந்திருந்தது.
உடனடியாக குமாரை அழைத்து லாட்டரி கடை ஊழியர் ஸ்வாதி தகவல் தெரிவித்தார்.
இதுகுறித்து குமார் கூறும்போது, ‘‘ஸ்வாதி கூறியதும் முதலில் நான் நம்பவில்லை. அவர் கிண்டலடிக்கிறார் என்று நினைத்தேன். இந்த பரிசு பணத்தில் நான் வீடு வாங்குவேன்’’ என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:02 pm
150 பயணிகளுடன் பறந்த தில்லி விமானத்தில் இயந்திர கோளாறு: அவசரமாக தரையிறக்கபட்டது
February 24, 2026, 6:32 am
டெல்லி நோக்கிச் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது: ஒருவர் உயிரிழந்தார்
February 19, 2026, 5:14 pm
சீன நாட்டு ரோபோவைத் தங்களின் கண்டுபிடிப்பாகக் காட்சிப்படுத்திய இந்தியப் பல்கலைக்கழகம்
February 17, 2026, 12:39 pm
நள்ளிரவில் யானை தாக்குதல்: மூன்று மாதக் குழந்தை உட்பட ஆறு பேர் பலி
February 16, 2026, 12:32 am
இந்தியா தேசிய விரைவுச் சாலைகளுக்கான சுங்கக் கட்டண விதிகளில் மாற்றம்: இன்று முதல் புதிய நடைமுறை அமல்
February 11, 2026, 4:17 am
அஜித்பவார் விமான விபத்தில் சதி: உறவினர் ரோகித்பவார் அடுக்கடுக்கான கேள்விகள்
February 10, 2026, 12:58 pm
செஷல்ஸுக்கு 17.50 கோடி டாலர் சிறப்பு பொருளாதார தொகுப்பு: இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு
February 6, 2026, 1:07 pm
