நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

3 மணி நேரத்தில் CHEQUEகளுக்கு பணம்: அக்டோபர் 4 முதல் அமல்

புது டெல்லி: 

வங்களில் பணம் இருந்தால் மாலை 4 மணிக்கு பிறகு 3 மணி நேரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு பணத்தை வழங்கிவிட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

பொதுவாக வங்கிகளில் CHEQUE -  காசோலைகளை பணமாக்க 2 நாட்களாகும். இது தனிநபர்கள், வர்த்தக நிறுவனங்கள் பலருக்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

காசோலை தீர்வு திட்டத்தின் செயல்திறனை மேம்படுத்த சி.டி.எஸ். முறையில் சில மாற்றங்களை கொண்டு வந்து இதற்கான சுற்றறிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

அதில், சி.டி.எஸ். முறையில் இரண்டு கட்டங்களாக மாற்றம் கொண்டுவரப்படுகிறது.

முதல்கட்டம் அக்டோபர் 4-ந் தேதி முதலும், இரண்டாம் கட்டம் வருகிற ஜனவரி 3-ந் தேதி முதலும் செயல்பாட்டுக்கு வருகிறது.

இந்த விதிமுறைகளின்படி வங்கிகளால் பெறப்பட்ட காசோலைகள் உடனடியாகவும், தொடர்ச்சியாகவும் வங்கிகளால் ஸ்கேன் செய்யப்பட்டு தீர்வு மையத்துக்கு அனுப்பப்படும்.

பின்னர் வழங்கப்பட்ட ஒவ்வொரு காசோலைக்கும் வங்கி நேர்மறையான உறுதிப்படுத்தல் அல்லது எதிர்மறை உறுதிப்படுத்தலை உருவாக்கும்.
இதன் மூலம் அன்றைய தினம் மாலை 4 மணிக்குள் பெறப்படும் காசோலைகள் அன்று இரவு 7 மணிக்குள் பணம் பெறும் வங்கிகளால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

2-ஆவது கட்டத்தில் காசோலை பெறப்பட்டதில் இருந்து 3 மணி நேரத்துக்குள் அங்கீகரிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset