செய்திகள் இந்தியா
ஒட்டு திருட்டை எதிர்த்து பிஹாரில் 1,300 கி.மீ. யாத்திரையை தொடங்கி வைத்தார் ராகுல் காந்தி
புதுடெல்லி:
ஒட்டு திருட்டை எதிர்த்தும் வாக்காளர் உரிமையை நிலைநாட்டுவதற்குமான யாத்திரையை பிஹாரில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று தொடங்கி வைத்தார். இதற்கான விழாவில், காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர்கள் லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பிஹாரில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சசாரமில் தொடங்கிய இந்த யாத்திரையின் மூலம் 1,300 கி.மீ தூரம் பயணித்து மக்களிடையே வாக்காளர் திருட்டுக்கு எதிரான பிரச்சாரங்களை இந்தியா கூட்டணி முடுக்கி விட உள்ளது.
யாத்திரை தொடக்க விழாவின்போது ராகுல் பேசும்போது, ‘‘இந்த யாத்திரை அரசியலமைப்பை காப்பாற்றுவதற்கான போராட்டம். நாடு முழுவதிலும் சட்டமன்ற தேர்தல்கள், மக்களவை தேர்தல்கள் திருடப்படுகின்றன.
பிஹாரில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்டு வாக்காளர்களை நீக்குவது மற்றும் சேர்ப்பதன் மூலம் வாக்குகளை திருட ஒரு புதிய சதி செய்யப்பட்டுள்ளது. பிஹாரில் தேர்தல்களை திருட நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.ஏழைகளிடம் மிஞ்சியுள்ளது வாக்குரிமை மட்டுமே. அதையும் அவர்கள் பறித்துக்கொள்ள நாங்கள் அனுமதிக்க மாட்டோம்’’ என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
