நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சோனியா காந்தி குடியுரிமை பெறுவதற்கு முன் தேர்தலில் போட்டி: புதிய சர்ச்சையை கிளப்பும் பாஜக

புது டெல்லி:

இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி வாக்காளர் அட்டை பெற்றுள்ளார் என பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

மக்களவை தேர்தலில் வாக்கு திருட்டு குற்றச்சாட்டை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி முன்வைத்து வருகிறார்.

அவருக்கு பதிலடி அளிக்கும் வகையில் பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மாளவியா, எக்ஸ் பதிவில், கடந்த 1983-ம் ஆண்டுதான் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, இந்திய குடியுரிமை பெற்றுள்ளார்.

அதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்னர் கடந்த 1980-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலிலேயே சோனியா காந்தி பெயர் இடம்பெற்றது. அதன்பின்னர் கடந்த 1982-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இருந்து சோனியா காந்தி பெயர் நீக்கப்பட்டது. இது வாக்காளர் சட்டப்படி அப்பட்டமான விதிமீறல் இல்லையா?

அதன்பின் மீண்டும் 1983-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் சோனியா பெயர் சேர்க்கப்பட்டது.

ராஜீவ் காந்தியை திருமணம் செய்த பிறகு இந்திய குடியுரிமை பெறுவதற்கு 15 ஆண்டுகள் சோனியா காந்தி காத்திருந்தது ஏன்? சோனியா காந்தியின் விதிமீறல் குறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset