
செய்திகள் இந்தியா
இந்தியாவில் வேகமாக பரவும் கொரோனா: 24 மணி நேரத்தில் 4 பேர் உயிரிழந்தனர்
புதுடெல்லி:
இந்தியாவில் இன்று (ஜூன் 2, 2025) காலை 8 மணி நிலவரப்படி, 3,961 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 4 பேர் உயிரிழந்தனர்.
இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி 3,961 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா முழுவதும் 203 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல நேற்று டெல்லி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி முதல் இந்தியாவில் ஒட்டுமொத்த கொரோனா இறப்புகள் 32 ஆக அதிகரித்துள்ளன.
தற்போது கேரளாவில் 1,435 பேரும், டெல்லியில் 483 பேரும், மகாராஷ்டிராவில் 506 பேரும், மேற்கு வங்கத்தில் 331 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் கொரோனா சூழல் குறித்து பேசிய மத்திய சுகாதாரம், ஆயுஷ் துறை இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ், “எங்கள் மத்திய சுகாதாரத் துறை மற்றும் ஆயுஷ் அமைச்சகம் இரண்டும் முழுமையாக விழிப்புடன் உள்ளன. அனைத்து மாநிலங்களிலும் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன. அந்தந்த மாநில சுகாதாரத்துறை செயலாளர்கள், பிற சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் நாங்கள் பேசியுள்ளோம்” என்று கூறினார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:46 pm
மணிப்பூரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:30 pm
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 9:02 pm
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
July 29, 2025, 10:57 am