
செய்திகள் இந்தியா
போர் விமானங்கள் இழந்ததை முதல் முறையாக ஒப்புக் கொண்டது இந்தியா
புது டெல்லி:
பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து நடைபெற்ற சண்டையில் இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக முப்படை தலைமைத் தளபதி அனில் சவுகான் தெரிவித்தார்.
ஆனால், எத்தனை போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டது என்று அவர் கூறவில்லை.
சிங்கப்பூரில் புளூம்பெர்க் தொலைக்காட்சிக்கு பேட்டியிளித்த அவரிடம் நான்கு நாள் சண்டையில் இந்தியா 6 போர் விமானங்களை இழந்ததாக பாகிஸ்தான் கூறுவதைக் கேட்டபோது அவர் மறுத்தார்.
பாகிஸ்தானுடனான சண்டையில் இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது என்பது முக்கியமல்ல.
எங்களின் போர்த் தந்திரத்தில் முதலில் ஏற்பட்ட தவறை புரிந்துகொண்டு 2 நாள்களுக்குப் பிறகு மீண்டும் வெற்றிகரமாக இயக்கினோம்.
இந்திய போர் விமானங்கள் நீண்ட தொலைவை இலக்காகக் கொண்டு பறக்கவிடப்பட்டன என்றார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியா எத்தனை போர் விமானங்களை இழந்தது என்று முதலில் இருந்தே எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி வருகிறார். அவரை பாஜகவினர் கடுமையா விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி இந்த விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
ஒன்றிய அரசு நாட்டை தவறாக வழிநடத்தியுள்ளது. உண்மை தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளது. என்றார் அவர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:46 pm
மணிப்பூரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:30 pm
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 9:02 pm
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
July 29, 2025, 10:57 am