
செய்திகள் இந்தியா
கேரளாவில் பெய்துவரும் கனமழையால் 10 பேர் உயிரிழப்பு
காசர்கோடு:
கேரளாவில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி நேற்று மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆலப்புழா, கோட்டையம், கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கிவருகிறது.
குறிப்பாக ஆலப்புழா, கோட்டையம், கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் கேரளாவில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி நேற்று மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 4 குழுக்களாக கிளம்பியுள்ளனர்.
ஒரு குழுவிற்கு 30 பேர் வீதம் 4 குழுக்களை சேர்ந்த 120 வீரர்கள் சாலை மார்க்கமாக விரைந்தனர். பத்தினம் திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபடுவார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவர்கள் அதிநவீன பைபர் படகுகள், மரம் வெட்டும் கருவிகள் ஆழ்கடல் நீச்சல் உடை உள்ளிட்ட அதிநவீன கருவிகளுடன் மீட்பு பணிக்காக சென்றுள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:46 pm
மணிப்பூரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:30 pm
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 9:02 pm
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
July 29, 2025, 10:57 am