
செய்திகள் மலேசியா
சைபர் பாதுகாப்பு திறன் பயிற்சித் திட்டம்; வேலை வாய்ப்புடன் இந்திய இளைஞர்களுக்கு வழங்கப்படுகிறது: பிரபாகரன்
சைபர்ஜெயா:
சைபர் பாதுகாப்பு திறன் பயிற்சித் திட்டம் வேலை வாய்ப்புடன் இந்திய இளைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.
மித்ரா சிறப்பு நடவடிக்கை குழுத் தலைவர் பிரபாகரன் இதனை கூறினார்.
சைபர் பாதுகாப்பு நிபுணத்துவ சான்றிதழ் பயிற்சி, வேலை வாய்ப்பு திட்டத்தில் பங்கேற்க இந்திய இளைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டது.
இசி கவுன்சிலுடன் இணைந்து Intellize Tech Services Sdn Bhd நிறுவனம் இப்பயிற்சிகளை வழங்குகிறது.
இது சைபர் பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பத் துறையில் திறன்களை மேம்படுத்துவதை இப்பயிற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ அல்லது இளங்கலைப் பட்டம் பெற் பட்டதாரிகளுக்கு இந்தத் திட்டத்தில் பங்கேற்க வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட 200 பங்கேற்பாளர்களுக்கு தொழில் வேலை வாய்ப்புகள் உட்பட நான்கு மாதங்களுக்கு அவர்களுக்கு இலவசப் பயிற்சி வழங்கப்படுகிறது.
அவ்வகையில் பயிற்சி பெற்ற 25 பேருக்கு அதற்கான சான்றிதழ் இன்று வழங்கப்பட்டது.
இந்தத் துறையில் தொழிலாளர்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், இலக்கவியல் சுற்றுச்சூழல் அமைப்பில் சைபர் பாதுகாப்புத் துறை முக்கியமான துறைகளில் ஒன்றாக மாறியுள்ளது.
பல உள்ளூர் பட்டதாரிகள் தங்கள் தகவல் தொழில்நுட்பப் படிப்பை வெற்றிகரமாக முடித்திருந்தாலும், திறன்களுக்கும் ஒட்டுமொத்தத் துறைக்கும் இடையிலான இடைவெளி காரணமாக சைபர் பாதுகாப்புத் தொழில்களில் முன்னோடியாக இருக்க முடியவில்லை.
எனவே, அவர்களின் திறனை அதிகரிக்கவும் தொழில்நுட்ப பட்டதாரிகளிடையே வேலையின்மை விகிதத்தைக் குறைக்கவும் மித்ரா இந்தத் திட்டத்தை வடிவமைத்துள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 30, 2025, 4:43 pm
பத்துகேவ்ஸ் இந்தியர் செட்டில்மெண்ட், செலயாங் வீட்டுப் பிரச்சினைகளில் பிரதமர் தலையி...
July 30, 2025, 4:03 pm
தேவக்ஷேனின் இறுதிச் சடங்கு சோகமான சூழலில் நடைபெற்றது
July 30, 2025, 4:01 pm
தேவக்ஷேன் மரணத்தால் மனமுடைந்த தாயார் தற்கொலை முயற்சி
July 30, 2025, 3:11 pm
நவீன விவசாயம், உணவு பதப்படுத்துதல் துறையில் இந்திய தொழில் முனைவோரின் திறனை வளர்ப்ப...
July 30, 2025, 12:16 pm
30 விழுக்காடு மித்ரா நிதியை திருப்பி கொடுத்தனர்; அப்போது யாரும் கேள்வி கேட்கவில்லை...
July 30, 2025, 8:55 am
கொலை செய்யப்பட்ட சிறுவன் தேவக்ஷேன் வீட்டில் அடிக்கடி சண்டை, அழுகை சத்தம் கேட்கும்...
July 30, 2025, 8:40 am
ஒருங்கிணைந்த, மீள்தன்மை கொண்ட பொருளாதாரத்தை உருவாக்குவதில் ஆசியான் கவனம் செலுத்த வ...
July 30, 2025, 8:38 am
ஆசிரியர் குத்தப்பட்ட வழக்கின் விசாரணைக்கு உதவ 14 வயது மாணவன் கைது: போலிஸ்
July 30, 2025, 8:36 am
கார் 80% எரிந்து சாம்பலானது: தலைமை ஆசிரியர் மரணம்
July 29, 2025, 11:03 pm