நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமெரிக்காவின் வரி விதிப்பு: ஆசியான் ஒருங்கிணைந்த முடிவு எடுக்கும்- பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தகவல் 

கோலாலம்பூர்: 

அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்பாக ஆசியான் ஒருங்கிணைந்த முடிவு எடுக்கும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். 

இதனால் அமெரிக்காவுடன் ஆசியான் இரு தரப்பு பேச்சு வார்த்தையை நடத்தும் என்று அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டார். 

ஆசியானின் ஒருங்கிணைந்த முடிவு குறித்து எந்தவொரு முடிவு எடுத்தாலும் அது மற்ற நாடுகளைப் பாதிக்காத வகையில் இருக்கும் என்று அவர் உத்தரவாதம் அளித்தார். 

ஆசியானின் சில விவகாரங்களில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டவுடன் அமெரிக்காவுடன் வரி விதிப்பு தொடர்பாக பேசப்படும் என்று அவர் சொன்னார். 

இந்நிலையில், ஆசியான் -அமெரிக்கா உச்சநிலை மாநாட்டினை நடத்த டிரம்ப் இணக்கம் வழங்க வேண்டும் என்று இதற்கு முன் அன்வார் தனது எதிர்பார்ப்பினை வெளிப்படுத்தியிருந்தார்.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset