நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆகஸ்ட் மாதம் ரஷ்யா செல்கிறார் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் 

கோலாலம்பூர்:

பேரரசர் சுல்தான் இப்ராஹிம் முதல் முறையாக ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற மேலவைத் துணைத் தலைவர் செனட்டர் நூர் ஜஸ்லான் முஹம்மத் தெரிவித்துள்ளார்.

இறைவன் அருளால் மாட்சியமை தாங்கியப் பேரரசர் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் ரஷ்யாவிற்கு தனது முதல் பயணத்தை மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரஷ்யாவின் வெளியுறவுத் துறைக்கான செனட்டர் Grigory Karasin உடனான சந்திப்பின் போது இது குறித்து தெரிவிக்கப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார். 

அதுமட்டுமல்லாமல், ஜூன் மாத இறுதியில் எரிசக்தி மற்றும் நீர்வளத் துறை அமைச்சரும் துணை பிரதமருமான டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசோப் ரஷ்யாவுக்கும் பயணம் மேற்கொள்ள திட்டம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset