
செய்திகள் மலேசியா
டொனால்டு டிரம்ப்பிற்கு ஆசியான் - அமெரிக்கா உச்சநிலை மாநாடு வேண்டுமென்றால் ஆசியான் அதற்கு ஆதரவு அளிக்கும்: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம்
கோலாலம்பூர்:
அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்பிற்கு ஆசியான் - அமெரிக்கா உச்சநிலை மாநாடு வேண்டுமென்றால் ஆசியான் அதற்கு ஆதரவு அளிக்கும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இதனால் ஆசியான், சீனாவுடன் மட்டும் நெருக்கம் காட்டாமல் அமெரிக்காவுடனும் அனைத்து வகையிலான ஒத்துழைப்புகளை நல்கும் என்று அவர் தெரிவித்தார்.
உலகளவில் எந்த பக்கமும் சாராமல் பொதுவான நிலைபாடு கொண்ட கொள்கையில் ஆசியான் இருப்பதால் இரு வல்லரசு நாடுகள் ஆசியானுடன் இணைந்து பணியாற்றலாம் என்று கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் உச்சநிலை மாநாட்டின் சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டார்.
சீனா, வலைகுடா ஒத்துழைப்பு மன்றம் உச்சநிலை மாநாட்டினை ஆசியான் நடத்தியுள்ளது. இதனால் தென்கிழக்காசியா நாடுகள் சீனா பக்கம் சாய்வதாக கூறப்படும் பொதுவான குற்றச்சாட்டையும் அவர் மறுத்தார்.
ஆசியான் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து வர்த்தக பேச்சுகளை முன்னெடுக்க தயாராக உள்ளது என்று டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சொன்னார்.
2025 ஆசியான் உச்சநிலை மாநாடு தலைவராக மலேசியா விளங்குகிறது. மே 26,27 தேதி 46ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு, ஜிசிசி- சீனா உச்சநிலை மாநாடு கோலாலம்பூரில் நடைபெற்றது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 29, 2025, 4:36 pm
சிலாங்கூர் டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் 8.3% குறைந்துள்ளது
May 29, 2025, 4:35 pm
EF ஆங்கிலப் புலமைக் குறியீட்டுப் பட்டியலில் பேராக் முதலிடத்தைப் பிடித்துள்ளது
May 29, 2025, 1:16 pm
தாதியர்களுக்கு வாரத்திற்கு 45 மணி நேரம் வேலை: ஆகஸ்ட் 1ஆம் தேதி அமலுக்கு வருகிறது
May 29, 2025, 1:15 pm
ரபிஸி, நிக் நஸ்மியின் ராஜினாமா முடிவை மதிக்க வேண்டும்: ஜாஹிட்
May 29, 2025, 1:13 pm
அன்வாருக்கான ஆதரவை மீட்டுக் கொள்ளும் செய்திகளை சாங் லி காங், டான் கெர் ஹெங் மறுத்தனர்
May 29, 2025, 1:12 pm