நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குழந்தை காப்பகத்தில் 7 மாத ஆண் குழந்தை மரணம்

பெட்டாலிங் ஜெயா:

கோலாலம்பூர், தாமான் டானாவ் கோத்தாவிலுள்ள குழந்தை காப்பகத்தில் ஏழு மாத ஆண் குழந்தை மரணமடைந்துள்ளது. 

இந்தத் துயரச் சம்பவம் திங்கட்கிழமை காலை 9 மணி முதல் 11 மணிக்குள் நடந்ததாக நம்பப்படுகிறது என்று வாங்சா மாஜு காவல்துறைத் துணை தலைவர் , Syahrul Anuar Abdul Wahab தெரிவித்தார். 

இது தொடார்பாக குழந்தையின் தந்தை அதே நாளில் மதியம் 1.26 மணிக்கு  Setapak காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக Syahrul Anuar Abdul Wahab தெரிவித்தார் கூறினார்.

மரணத்திற்கான சரியான காரணத்தை அடையாளம் காண பிரேத பரிசோதனை செயல்முறை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் இந்த வழக்கு குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 31(1) இன் படி விசாரிக்கப்படுகிறது என்று அவர் அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த வழக்கை கோலாலம்பூர் காவல் நிலையத்தின் பாலியல் குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் புலனாய்வு பிரிவு (D11), குற்றப் புலனாய்வுத் துறை (JSJ) கையாள்வதாக அவர் கூறினார்.

காவல்துறையினர் இன்னும் குழந்தைகள் காப்பகம் மற்றும் அது தொடர்புடைய நபர்களிடமிருந்து வாக்குமூலங்களை எடுப்பது உட்பட கூடுதல் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset