
செய்திகள் மலேசியா
5 மில்லியன் ஆசியான் குடிமக்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு கல்வி வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன: ஸ்டிவன் சிம்
கோலாலம்பூர்:
மலேசியா வழங்கும் 65,000 இலவச திறன் மேம்பாட்டு கல்வி வாய்ப்புகளால்சுமார் ஐந்து மில்லியன் ஆசியான் குடிமக்கள் பயனடைவார்கள் என்று மனிதவள அமைச்சர் ஸ்டிவன் சிம் கூறினார்.
இதற்கு அரசு சுமார் RM2.5 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
2025 ஆசியான் திறன் ஆண்டு என்ற திட்டத்தின் கீழ் செயற்கை நுண்ணறிவு, இலக்கவியல் மயமாக்கல், பசுமை தொழில்நுட்பம் மற்றும் தலைமைத்துவம் போன்ற துறைகளில் கல்வி வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாக ஸ்டிவன் சிம் குறிப்பிட்டார்.
ஜூன் 14 முதல் 21 வரை நடைபெறும் தேசிய பயிற்சி வாரத்துடன் இணைந்து இந்தக் கல்வி வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
Microsoft, Udemy, AwanTech, Alibaba Cloud போன்ற சிறந்த உலகளாவிய பயிற்சி நிறுவனங்களும் உள்ளூர் பயிற்சி நிறுவனங்களும் இணைந்து பயிற்சி வழங்கப்படும் என்றார் அவர்.
முதல் முறையாக, இந்த உயர்தர பயிற்சி வாய்ப்புகள் ஆசியான் வட்டாரத்திற்கு திறக்கப்படவுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 29, 2025, 4:36 pm
சிலாங்கூர் டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் 8.3% குறைந்துள்ளது
May 29, 2025, 4:35 pm
EF ஆங்கிலப் புலமைக் குறியீட்டுப் பட்டியலில் பேராக் முதலிடத்தைப் பிடித்துள்ளது
May 29, 2025, 1:16 pm
தாதியர்களுக்கு வாரத்திற்கு 45 மணி நேரம் வேலை: ஆகஸ்ட் 1ஆம் தேதி அமலுக்கு வருகிறது
May 29, 2025, 1:15 pm
ரபிஸி, நிக் நஸ்மியின் ராஜினாமா முடிவை மதிக்க வேண்டும்: ஜாஹிட்
May 29, 2025, 1:13 pm
அன்வாருக்கான ஆதரவை மீட்டுக் கொள்ளும் செய்திகளை சாங் லி காங், டான் கெர் ஹெங் மறுத்தனர்
May 29, 2025, 1:12 pm