
செய்திகள் இந்தியா
வரலாறு காணாத வெள்ளம்: 5 நாட்களுக்கு கர்னாடாக மாநிலம் முழுவதற்கும் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
பெங்களூரு:
கர்நாடகாவின் கடலோர பகுதிகளுக்கு அடுத்து வரும் 5 நாட்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுத்துள்ளது.
பெலகாவியில் சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று வயது சிறுமி உயிரிழந்தார். இதனிடையே, பெங்களூருவில் வரலாறு காணாத மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
தென்மேற்கு பருவமழை கர்நாடகாவில் தீவிரமடைந்துள்ள நிலையில், திங்கள்கிழமை தொடர்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்ததால் பல்வேறு மாவட்டங்களில் நிலச்சரிவுகள், வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டது.
கடலோர கர்நாடகாவுக்கு 5 நாட்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இப்பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் 20 சென்டி மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது.
தட்சிண கன்னடா, உத்தர கன்னடா மாவட்டங்களில், பல்வேறு நிலச்சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பெல்தங்கடியைச் சுற்றியுள்ள ஆறுகளில் நீர் மட்டம் கடுமையாக உயர்ந்துள்ளது, இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
பெங்களூரு இந்த மாதத்தில் அதிகாரப்பூர்வமாக, இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச மழைப் பொழிவை பதிவு செய்துள்ளது. திங்கள்கிழமை (மே 26) காலை வரை 307.9 மிமீ ஒட்டுமொத்த மழைப் பொழிவைப் பதிவு செய்துள்ளது. இது பெங்களூருவுக்கு மே 2023-ல் அதன் முந்தைய சாதனையான 305.4 மி.மீ மழைப் பொழிவை விட அதிகமாகும்.
அதேபோல கடலோர கர்நாடகாவில் சுமார் 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு மிக அதிகப்படியான மழைப் பொழிவு பதிவாகியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:46 pm
மணிப்பூரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:30 pm
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 9:02 pm
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
July 29, 2025, 10:57 am