நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

10,000த்திற்கு மேற்பட்ட இந்திய வர்த்தகர்களை நெகிரி செம்பிலான் இந்திய வர்த்தக தொழிலியல் சபை உருவாக்கியுள்ளது: திருநாவக்கரசு

சிரம்பான்:

பல்வேறு திட்டங்களின் வாயிலாக 10,000த்திற்கு மேற்பட்ட இந்திய வர்த்தகர்களை நெகிரி செம்பிலான் இந்திய வர்த்தக தொழிலியல் சபை உருவாக்கியுள்ளது.

அச்சபையின் தலைவர்  மு. திருநாவக்கரசு இதனை கூறினார்.

நெகிரி செம்பிலான் இந்திய வர்த்தக தொழிலியல் சபையின் 37ஆவது ஆண்டுக் கூட்டம் அண்மையில் சிரம்பான் சிலோனிஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு தலைமையேற்று பேசிய அவர்,

நெகிரி செம்பிலான்  இந்திய வர்த்தக தொழிலியல் சபை 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட இந்தியர்களுக்கு பல்வேறான தொழில் வர்த்தகத்தில் ஈடுபட வாய்ப்புகளை ஏற்படுத்து கொடுத்துள்ளது.

கடந்த ஆண்டில் சுமார் 200க்கம் மேற்பட்ட இந்திய வர்த்தகர்களுக்கு உதவுவதற்கு மித்ராவின் வாயிலாக  7 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள உதவிப் பொருட்கள் வாங்கி தரப்பட்டது.

இந்த ஆண்டிலும் இந்திய வர்த்தகர்களின் தொழிலை துறையை மேம்படுத்துவதற்கு  5 லட்சம் ரிங்கிட் நிதிக்கு மித்ராவிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

அந்நிதி கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளது என்று அவர் நம்பிக்கையுடன் கூறினார்.

மைக்கியின் துணைத் தலைவர் டத்தோ டாக்டர் ஏ.டி. குமாரராஜா முன்னிலையில்  இக்கூட்டம் நடைபெற்றது.

மாநில வர்த்தக சபையின் தலைவர் மு.திருநாவக்கரசு, துணைத் தலைவர் ஏ.சிவகுமார், உதவித் தலைவரகளாக பி. பன்னீர் செல்வம், ஆர். திவியமுகுந்தன்,  எஸ் .கோமதி, ஆ.சுரேஸ் உட்பட பொறுப்பாளர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தை  இந்திய தொழில் அதிபர்களாக இருக்கும் டத்தோஸ்ரீ காந்தி, டத்தோ.கணேசன், டத்தோ எம்.நடராஜன், டத்தோ எம். சதீஷ்குமார் ஆகியோர் இக்கூட்டத்தில் சிறப்ப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset