நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மென்செஸ்டர் யுனைடெட் அணி நிர்வாகத்தைச் சந்தித்தார் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் 

கோலாலம்பூர்: 

மென்செஸ்டர் யுனைடெட் & ஆசியான் ஆல் ஸ்டார்ஸ் அணிகளின் பிரதிநிதிகளுடன் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சந்திப்பு நடத்தினார். 

46ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு நடைபெற்று வரும் நிலையில் நாளை மே 28ஆம் தேதி கோலால்ம்பூர் புக்கிட் ஜாலில் விளையாட்டரங்கில் மென்செஸ்டர் யுனைடெட் - ஆசியான் ஆல் ஸ்டார்ஸ் அணிகளிடையே நட்புமுறை காற்பந்து போட்டி நடைபெறவுள்ளது. 

மென்செஸ்டர் யுனைடெட் அணியைப் பிரதிநிதித்து அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஒமார் பெர்ரெடா, நிர்வாகி ரூபன் அமொரிம் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில் இளைஞர் விளையாட்டு அமைச்சர் ஹன்னா இயோ, டான்ஶ்ரீ ஹமிடின் முஹம்மத் அமின், PRO EVENTS CEO ஜுலியன் கம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். 

நாளை இரவு 8.45 மணிக்கு மென்செஸ்டர் யுனைடெட், ஆசியான் ஆல் ஸ்டார்ஸ் அணி புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் நடைபெறுகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset