
செய்திகள் ASEAN Malaysia 2025
ஆசியான் 2045ன் புதிய அத்தியாய அடையாளத்தின் தொடக்கமாக கோலாலம்பூர் பிரகடனம் விளங்குகிறது: டத்தோஶ்ரீ ரமணன்
கோலாலம்பூர்:
ஆசியான் 2045ன் புதிய அத்தியாய அடையாளத்தின் தொடக்கமாக கோலாலம்பூர் பிரகடனம் விளங்குகிறது.
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.
ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கோலாலம்பூர் பிரகடனம் இன்று கையெழுத்தானது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தைக் காண அமைச்சரவை சகாக்கள், ஆசியான் நாடுகளைச் சேர்ந்த சகாக்களுடன் கலந்து கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன்.
அதிகரித்து வரும் சிக்கலான வட்டார சவால்கள், ஆற்றலைக் கருத்தில் கொண்டு, மிகவும் நிலையான, உள்ளடக்கிய மற்றும் மீள்தன்மை கொண்ட எதிர்காலத்தை உருவாக்குவதற்கான 531 நடவடிக்கைகள் மூலம் ஆசியான் நாடுகளின் கூட்டு உறுதிப்பாட்டின் வெளிப்பாடாக இந்தப் பிரகடனம் உள்ளது.
கோலாலம்பூர் பிரகடனம் 2015ஆம் ஆண்டு மலேசியா ஆசியான் தலைவராக ஆனபோது கையெழுத்திடப்பட்டது.
ஆனால் தற்போது ஆசியான் 2025 ஒன்றாக முன்னேறுதல் திட்டத்தின் கீழ் ஒரு புதிய இலக்கை அடிப்படையாக கொண்டு புதிய பிரகடனம் கையெழுத்தாகியுள்ளது.
இந்த நடவடிக்கைகளை செயல்படுத்துவதன் மூலம் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் ஆசியான் ஒரு வலுவான, நிலையான வட்டாரமாக தொடர்ந்து வெளிப்படும்.
மேலும் உலகின் புவிசார் அரசியல் நிலப்பரப்பில் செல்வாக்கு மிக்க பிராந்திய சக்தியாக மாறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று டத்தோஶ்ரீ ரமணன் கூறினார்.
முன்னதாக கோலாலம்பூர் பிரகடனத்தில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உட்பட ஆசிய தலைவர்கள் கையெழுத்திட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 12, 2025, 10:29 pm
இல்மு செயற்கை நுண்ணறிவு திட்டம்; வேலை வாய்ப்புகளுக்கு அச்சுறுத்தலாக இருக்காது: கோபிந்த் சிங்
August 12, 2025, 10:26 pm
செயற்கை நுண்ணறிவு தேசமாக மாறுவதை மலேசியா இலக்காகக் கொண்டுள்ளது: பிரதமர்
July 27, 2025, 9:54 am
தாய்லாந்து - கம்போடியா உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும்: மலேசியா வலியுறுத்து
June 19, 2025, 12:27 pm