
செய்திகள் விளையாட்டு
சிலாங்கூர் கோஜூ காய் கராத்தே போட்டியில் 250 போட்டியாளர்கள் பங்கேற்றனர்: சென்சே பிரபாகரன்
செமினி:
சிலாங்கூர் கோஜூ காய் கராத்தே போட்டியில் 250 போட்டியாளர்கள் பங்கேற்று தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.
சிலாங்கூர் கோஜூ காய் கராத்தே சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சென்சே பிரபாகரன் இதனை கூறினார்.
8ஆவது சிலாங்கூர் கோஜூ காய் கராத்தே போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை செமினி சமூக மண்டபத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது.
காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற்ற இப்போட்டியில் 4 வயது முதல் 17 வயதுக்குட்பட்ட சுமார் 250 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
அவர்கள் அனைவரும் காஜாங், செமினி, பத்துமலை, செராஸ், செலாயாங் பாரு, பத்துமலை, பலாக்கோங், பெரானாங் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
டூசுன் துவா சட்டமன்ற உறுப்பினரின் சிறப்பு அதிகாரி முகமத் நோர் அஹ்மத் இப்போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தனர்.
சிலாங்கூர் கோஜூகாய் கராத்தே சங்கத்தின் தலைவர் மாஸ்டர் சிதம்பரம் தலைமையில் இப்போட்டி நடைபெற்றது.
மேலும் கோம்பாக் கோஜூ காய் காரத்தே சங்கத்தின் தலைவர் செல்வேந்திரன் உட்பட பலர் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.
பல பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் தலா 4 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்தப் போட்டியின் முக்கிய நோக்கம் சிறந்த விளையாட்டு வீரர்களைக் கண்டறிந்து அவர்களை மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பிரதிநிதித்துவப்படுத்துவதாகும்.
ஒவ்வொரு மாதமும் ஆங்காங்கே போட்டிகள் நடப்பதால், இங்கு போட்டி நடத்தி சிறந்த விளையாட்டாளர்களைத் தேர்வு செய்து அழைத்துச் செல்வோம் என்று பிரபாகரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 29, 2025, 12:28 am
மே பேங்க் வெற்றியாளர் கிண்ணத்தை ஆசியான் ஆல் ஸ்டார் அணி வென்றது
May 28, 2025, 6:02 pm
மரடோனாவின் மரணம் குறித்த வழக்கு நடைபெறுமா?
May 28, 2025, 3:35 pm
பேராக்கில் இடைநிலைப்பள்ளி இந்திய மாணவர்களுக்கு கபடி போட்டி
May 28, 2025, 11:56 am
ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாகப் புதிய சாதனை படைத்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
May 27, 2025, 11:20 am
லிவர்பூல் ரசிகர்கள் மீது கார் மோதியதில் 47 பேர் காயம்
May 27, 2025, 11:11 am
அல் நசர் அணியை விட்டு வெளியேறுகிறார் தாக்குதல் ஆட்டக்காரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ
May 27, 2025, 8:49 am