நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

லிவர்பூல் ரசிகர்கள் மீது கார் மோதியதில் 47 பேர் காயம்

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்த லிவர்பூல் அணி ரசிகர்கள் மீது கார் மோதியது.

அந்தக் காரை ஓட்டியதாகச் சந்தேகிக்கப்படும் 53 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் 47 பேர் காயமுற்றனர். மேலும் 27 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஒரு பிள்ளையும் ஒரு பெரியவரும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக அவசர மருத்துவச் சேவை தெரிவித்தது.

இங்கிலாந்து பிரிமியர் லீக் வெற்றி கிண்ணத்தை லிவர்பூல் அணி கைப்பற்றியது.

லிவர்பூல் அணி விளையாட்டாளர்களின் வெற்றி உலாவைக் காண பல்லாயிரம் ரசிகர்கள் கூடியிருந்தனர்.

சம்பவம் தனிப்பட்ட முறையில் நடந்தது என்றும் அதைப் பயங்கரவாதம் என்று வகைப்படுத்தப்போவதில்லை என்றும் இங்கிலாந்து போலிஸ் துறை துறை தெரிவித்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset