நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மென்செஸ்டர் யுனைடெட் - ஆசியான் ஆல் ஸ்டார் அணிகள் மோதும் ஆட்டம் இன்று புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெறுகிறது

கோலாலம்பூர்:

மென்செஸ்டர் யுனைடெட் - ஆசியான் ஆல் ஸ்டார் அணிகள் மோதும் ஆட்டம் இன்று புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெறுகிறது.

இங்கிலாந்து கால்பந்து சீசன் முடிவடைந்துள்ள நிலையில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் ஆசிய பயணமாக மலேசியா வந்துள்ளனர்.

இப்பயணத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் ஆசியான் ஆல் ஸ்டார் அணியுடம் மோதவுள்ளனர்.

இவ்வாட்டம் இன்று இரவு 8.45 மணியளவில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.

கிட்டத்தட்ட 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் இவ்வாட்டத்தை நேரடியாக கண்டு களிக்கவுள்ளனர்.

இந்நிலையில் இங்கிலாந்து பிரிமியர் லீக் ஜாம்பவான்களான மென்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தி, ஆச்சரியமான தோல்வியை கொடுக்க ஆசியான் ஆல் - ஸ்டார்ஸ் அணியினர் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

இந்த போட்டியை எதிர்கொள்வதில் தனது அணிக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது. 

அனைத்து வீரர்களையும் ஒன்று திரட்ட நேரமின்மை காரணமாக ஒரு முறை மட்டுமே பயிற்சி செய்ய நேரம் கிடைத்தது.

இருந்தாலும் மென்செஸ்டர் யுனைடெட் அணிக்காக ஆசியான் ஆல் ஸ்டார் அணி முழு திறனை வெளிப்படுத்தும் என்று அவ்வணி பயிற்சியாளர் கிம் சாங் சிக் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset