நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மே பேங்க் வெற்றியாளர் கிண்ணத்தை ஆசியான் ஆல் ஸ்டார் அணி வென்றது

புக்கிட்ஜாலில்:

மே பேங்க் வெற்றியாளர் கிண்ணத்தை வென்று ஆசியான் ஆல் ஸ்டார்  அணியினர் சாதித்துள்ளனர்.

இங்கிலாந்து கால்பந்து போட்டிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் ஆசிய பயணமாக மலேசிய வந்துள்ளனர்.

இதில் அவ்வணியினர் ஆசியான் ஆல் ஸ்டார் அணியை எதிர்த்து களமிறங்கினர்.

புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தை 72,550 ரசிகர்கள் நேரடியாக கண்டு களித்தனர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் ஆசியான் ஆல் ஸ்டார் அணியிடம் தோல்வி கண்டனர்.

ஆசியான் ஆல் ஸ்டார் அணியின் வெற்றி கோலை மாவ்ங் லிவின் அடித்தார்.

இந்த வெற்றியை தொடர்ந்து ஆசியான் ஆல் ஸ்டார் அணியினர் மே பேங்க் வெற்றியாளர் கிண்ணத்தை தட்டிச் சென்றனர்.

ஆசியான் ஆல் ஸ்டார் அணியினருக்கு வெற்றி கிண்ணத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எடுத்து வழங்கினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset