நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் ASEAN Malaysia 2025

By
|
பகிர்

ஆசியானின் எதிர்காலம் குறித்து எந்த முடிவுகளையும் எடுப்பதற்கு முன் மக்களின் குரலைக் கருத்தில் கொள்ள வேண்டும்: பிரதமர்

கோலாலம்பூர்:

ஆசியானின் எதிர்காலம் குறித்து எந்த முடிவுகளையும் எடுப்பதற்கு முன் மக்களின் குரலைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

ஆசியான் உறுப்பு நாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பிரதிநிதிகளும், பிராந்தியத்தின் எதிர்காலம் குறித்து எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன், மக்களின் குரல்களை எப்போதும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இன்று நடைபெற்ற 14ஆவது ஆசியான் சபைக் கூட்டத்தின் தொடக்க உரையின் போது பிரதமர் இந்த அழைப்பை விடுத்தார்.

சமூகக் கட்டமைப்பு முயற்சிகளில் ஆசியான் ஒரு புதிய கட்டத்தில் நுழையும் போது, ​​மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் இதுவொரு ஒரு முக்கிய பங்காளியாக இருக்க முடியும்.

நமது வட்டாரத்தஒ வடிவமைக்கும் ஒவ்வொரு முடிவிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் வெளிப்படுத்தப்படும் மக்களின் குரல் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset