செய்திகள் ASEAN Malaysia 2025
காஸா, மியன்மார் நெருக்கடிகளுக்கு ஆசியான் கூட்டமைப்பு குரல் எழுப்ப வேண்டும்: வெளியுறவு அமைச்சர் முஹம்மத் ஹசன்
கோலாலம்பூர்:
காஸா, மியன்மார் நெருக்கடிகளுக்கு ஆசியான் கூட்டமைப்பு குரல் எழுப்ப வேண்டும் என்று மலேசியா வலியுறுத்துவதாக நாட்டின் வெளியுறவு அமைச்சர் முஹம்மத் ஹசன் கூறினார்.
உலகளவில் அநீதியான சூழல் நிகழ்ந்து வருவதால் ஆசியான் கூட்டமைப்பு அதனை கண்டுக்கொள்ளாமல் இருக்கக்கூடாது என்று அவர் அழுத்தமாக குறிப்பிட்டார்.
சர்வதேச மேம்பாட்டை உருவாக்க ஆசியான் தகுந்த பங்களிப்பினை வழங்க வேண்டும். இதனால் மனித உரிமை, நீதி, இறையாண்மை யாவும் காக்கப்படும் என்று முஹம்மத் ஹசன் கூறினார்.
மியன்மாரில் நிலநடுக்கத்திற்குப் பிறகு நடைமுறைப்படுத்தப்பட்ட சண்டைநிறுத்தத்தை நீட்டிக்கும்படி ஆசியான் உச்சநிலை மாநாட்டில் மலேசியா கோரிக்கை விடுத்துள்ளது.
சண்டைநிறுத்த ஒப்பந்தம் இம்மாத (மே) இறுதியில் முடிவுக்கு வருகிறது.
மார்ச் மாத இறுதியில் மியன்மாரை நிலநடுக்கம் உலுக்கியது. அதில் கிட்டத்தட்ட 3,800 பேர் மாண்டனர். பல்லாயிரம் பேர் வீடுகள் இல்லாமல் தவித்தனர்.
இன்று ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நடத்தினர்.
தற்போது பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு அப்பாற்பட்ட இடங்களிலும் சண்டைநிறுத்தம் தேவை என்று முஹம்மத் ஹசன் வலியுறுத்தினார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
November 2, 2025, 9:25 am
"மின்-சிகரெட்களுக்கு எதிரான போராட்டம் - ஆசியான் ஒன்றிணைய வேண்டும்": சிங்கப்பூர் அமைச்சர் ஓங் இ காங்
October 28, 2025, 9:11 am
டிரம்ப் மலேசியாபால் ஈர்க்கப்பட்டுள்ளார்: அமெரிக்க தூதர்
October 28, 2025, 8:47 am
ஆசியான் ஒத்துழைப்பு வட்டார எதிர்காலத்தை வடிவமைக்கும்: ஜப்பான் புதிய பிரதமர் நம்பிக்கை
October 27, 2025, 1:36 pm
மலேசியா 'ஒரு சிறந்த, மிகவும் துடிப்புமிக்க நாடு': டிரம்ப் பாராட்டு
October 27, 2025, 1:12 pm
எதிர்கால சுகாதார நெருக்கடிகளைச் சமாளிக்க ஆசியான் பிளஸ் த்ரீ - APT - ஆதரவு அளிக்கும்: பிரதமர் அன்வார்
October 27, 2025, 12:40 pm
சீனாவுடன் வர்த்தக உடன்பாடு எட்டப்படும்: டொனால்ட் டிரம்ப் உறுதி
October 27, 2025, 9:17 am
