நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் ASEAN Malaysia 2025

By
|
பகிர்

கோலாலம்பூர் பிரகடனம் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ASEAN ஒன்றுபடுவதற்கான உறுதியை காட்டுகிறது: கல்வியாளர்

கோலாலம்பூர்:

கோலாலம்பூர் பிரகடனம் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ஆசியான் ஒன்றுபடுவதற்கான உறுதியை காட்டுகிறது.

மலேசிய தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் முகமது மிசான் அஸ்லம் இதனை கூறினார்.

பல்வேறு வகையான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் போது பிராந்தியத்தின் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் கோலாலம்பூர் பிரகடனம் மிகவும் முக்கியமானது.

அச்சுறுத்தல்களில் சைபர் போர் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் முக்கியமாக உள்ளது.

இதை எதிர்கொள்ள சில பலங்கள், உத்திகள் தேவைப்படும் பாதுகாப்பு சிக்கல்கள் இதில் அடங்கும்.

ஆசியான் இந்த அச்சுறுத்தல்களை இனி வழக்கமான முறையில் எதிர்கொள்ள முடியாது.

ஆனால் அசாதாரண பொருளாதார நிலைத்தன்மையைக் கொண்டிருப்பதோடு கூடுதலாக இலக்கவியல் மாற்றத்திற்கும் மாற வேண்டும்.

பெரும் வல்லரசுகள் தங்கள் பொருளாதார வலிமையுடன் ஆசியானின் நலன்களை ஒப்புக் கொள்ள வேண்டும்.

மேலும்  மோதல்களை அமைதியான முறையில் தீர்க்க போர் அல்லாத உத்தியைக் கொண்டிருக்க  முழுமையாகக் கட்டுப்படுத்தப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

வருங்காலங்களில் நிச்சயமாக மலேசியாவும் ஆசியானும் உயர்வாகக் கருதப்படும்

எந்தவொரு பிரச்சினையிலும் ஆசியான் நாடுகளிடம் ஆலோசிக்கப்படும் என்று அவர்  தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset