
செய்திகள் இந்தியா
24 பேர் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை: சூதாட்ட செயலிகளை தடை செய்ய மனு மீது ஒன்றிய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
புதுடெல்லி:
ஆன்லைன் சூதாட்ட செயலிகளை தடை செய்ய மனு மீது ஒன்றிய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ஆன்லைனில் சட்ட விரோதமாக இயங்கும் சூதாட்ட செயலிகளை தடை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 24 பேர் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட கடனை செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில், ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடித்த 25 பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் மீது தெலங்கானா மாநில காவல் நிலையங்களில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் என் கே சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, சட்ட விரோத ஆன்லைன் சூதாட்ட செயலிகளை தடை செய்ய கோரிய மனு குறித்து பதில் அளிக்க ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:46 pm
மணிப்பூரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:30 pm
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 9:02 pm
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
July 29, 2025, 10:57 am