
செய்திகள் மலேசியா
விஷமப் பிரச்சாரங்களுக்கு மத்தியில் கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவரானார் டத்தோஸ்ரீ ரமணன்
ஜொகூர்பாரு:
விஷமப் பிரச்சாரங்களுக்கு மத்தியில் டத்தோஸ்ரீ ரமணன் ராமக்கிருஷ்ணன்
கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவரானார்.
கெஅடிலான் கட்சியின் உயர்மட்ட தலைவர்களுக்கான தேர்தல் இன்று நடைபெற்று முடிந்தது.
இதில் கட்சியின் உதவித் தலைவர்களுக்கான தேர்தல் மிகவும் கடுமையான போட்டியாக நடைபெற்றது.
இந்த தேர்தலில் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி 7955 வாக்குகளை பெற்று முதல் நிலையில் வெற்றி பெற்றார்.
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் 5895 வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தார்.
டத்தோஸ்ரீ ரமணனுக்கு எதிராக விஷமப் பிரச்சாரங்கள் சில நாட்களாக மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் அவை எல்லாவற்றையும் தவிடு பொடியாக்கி இந்த தேர்தலில் வெற்றி பெற்று டத்தோஸ்ரீ ரமணன் சாதித்துள்ளார்.
இந்த தேர்தலில் நெகிரி செம்பிலான் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹாருண் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க அமைச்சர் சாங் லி காங் நான்காவது நிலையில் வெற்றி பெற்றார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 23, 2025, 10:02 pm
கெஅடிலான் மத்திய செயலவை உறுப்பினர்கள் தேர்தலில் குணராஜ் உட்பட 3 இந்தியர்கள் வெற்றி
May 23, 2025, 9:47 pm
கெஅடிலான் துணைத் தலைவருக்கான தேர்தலில் நூருல் இசா அன்வார் வெற்றி
May 23, 2025, 9:46 pm
லெபோ அம்பாங் இந்தியர் பாரம்பரிய வர்த்தக சங்கத்தின் புதிய தலைவராக வேலாண்டி தேர்வு
May 23, 2025, 3:46 pm
கெஅடிலான் தேர்தலில் எனக்கு எந்த அணியும் இல்லை: அன்வார்
May 23, 2025, 3:43 pm