
செய்திகள் மலேசியா
லெபோ அம்பாங் இந்தியர் பாரம்பரிய வர்த்தக சங்கத்தின் புதிய தலைவராக வேலாண்டி தேர்வு
கோலாலம்பூர்:
லெபோ அம்பாங் இந்தியர் பாரம்பரிய வர்த்தக சங்கத்தின் புதிய தலைவராக வேலாண்டி இன்று தேர்வு செய்யப்பட்டார்.
லெபோ அம்பாங் இந்தியர் பாரம்பரிய வர்த்தக சங்கத்தின் 16 ஆம் ஆண்டு கூட்டம் இன்று நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் ஹாஜி முகம்மது இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இந்த ஆண்டு கூட்டத்தில் செயலாளர் இராஜன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
சங்கத்தின் பொருளாளர் லோகநாதன் கணக்கறிக்கையை சமர்ப்பித்தார்.
அதன் பின்னர் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு நடைபெற்றது. கவிமாறன், சோலை பாஸ்கரன் தேர்தல் அதிகாரியாக பணியாற்றினார்.
சங்கத்தின் புதிய தலைவராக வேலாண்டி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
துணை தலைவராக நாராயணன், செயலாளராக இராஜன், துணை செயலாளராக இந்திரா, பொருளாளராக லோகநாதன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர்களாக ரவிச்சந்திரன், அருண் சொக்கலிங்கம், அருண் சுந்தரை, ராஜம்மாள், ஷெய்க் நஸ்ருன், வள்ளியப்பன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கணக்காய்வாளர்களாக குமாரி ஹரிணி, ஷாபி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
2025 முதல் 2027 ஆம் ஆண்டு வரை இவர்கள் சங்கத்தை வழிநடத்துவார்கள்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 23, 2025, 10:02 pm
கெஅடிலான் மத்திய செயலவை உறுப்பினர்கள் தேர்தலில் குணராஜ் உட்பட 3 இந்தியர்கள் வெற்றி
May 23, 2025, 9:53 pm
விஷமப் பிரச்சாரங்களுக்கு மத்தியில் கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவரானார் டத்தோஸ்ரீ ரமணன்
May 23, 2025, 9:47 pm
கெஅடிலான் துணைத் தலைவருக்கான தேர்தலில் நூருல் இசா அன்வார் வெற்றி
May 23, 2025, 3:46 pm
கெஅடிலான் தேர்தலில் எனக்கு எந்த அணியும் இல்லை: அன்வார்
May 23, 2025, 3:43 pm