நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெஅடிலான் துணைத் தலைவருக்கான தேர்தலில் நூருல் இசா அன்வார் வெற்றி

ஜொகூர்பாரு:

கெஅடிலான் கட்சியில்  துணைத் தலைவருக்கான தேர்தலில்  நூருல் இசா அன்வார் மகத்தான வெற்றியை பதிவு செய்தார்.

கெஅடிலான் கட்சியின் தேசிய பேராளர் மாநாடு ஜொகூர் பாருவில் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் கட்சியின் உயர்மட்ட தலைவர்களுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.

குறிப்பாக கெஅடிலான் துணைத் தலைவர் பதவிக்கு ரபிசி ரம்லிக்கும் நூருல் இசா அன்வாருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

இதில் நூருல் இசா அன்வார் 9,803 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

இதன் மூலம் கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவராக நூருல் இசா பேராளர்களால் தேர்வு செய்யப்பட்டார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட ரபிசி ரம்லி 3866 வாக்குகளை பெற்று தோல்வி கண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset