நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் விமான நிலையங்களுக்கு அருகே உயரமான கட்டடங்கள் கட்ட அனுமதி: போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டா 

சிங்கப்பூர்:

சிங்கப்பூர் விமான நிலையங்களுக்கு அருகே கட்டப்படும் கட்டடங்களுக்கு இருக்கும் உயர கட்டுப்பாடு மாற்றியமைக்கப்படலாம்.

இவ்வாண்டு பிற்பாதியில் அதனை எதிர்பார்க்கலாம் என்று போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டா (Chee Hong Tat) கூறினார்.

உயரமான குடியிருப்பு, வர்த்தகக் கட்டடங்கள் வர வாய்ப்புகள் உள்ளன.

40ஆவது சிங்கப்பூர் வர்த்தக விருதுகள் நிகழ்ச்சியில் பேசிய அவர் அதனைத் தெரிவித்தார்.

சிங்கப்பூர் விமான நிலையங்களுக்கு அருகே உயரமான கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கப்படலாம்

முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்கள் மூலம் வெவ்வேறு பகுதிகளில் உயரமான கட்டடங்கள் கட்டப்படலாம்.

குடியிருப்பு கட்டடங்களில் 15 மாடிகள் கூடுதலாகவும் வர்த்தகக் கட்டடங்களில் 9 மாடிகள் கூடுதலாகவும் சேர்க்கப்படலாம்.

இறுதி முடிவு எடுக்கப்படுவதற்கு முன் வெவ்வேறு அமைப்புகள் ஆய்வுகளை நடத்த வேண்டும் என்றார் அமைச்சர் சீ.
விளம்பரம்

சிங்கப்பூரில் நிலப் பற்றாக்குறை நிலவுகிறது.

அதைச் சமாளிக்க நிலத்தை சிறந்த முறையில் பயன்படுத்த புதிய முயற்சி உதவும் என்பது நம்பிக்கை.

அது மூலம் கூடுதலான வீடுகளையும் கட்டலாம் என்றார் சீ.

ஆதாரம்: CNA

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset