நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

1655 உயிர்களின் அழுக் குரலால் மௌனமானது சிலி: 65 ஆண்டுகள்  கடந்தும் அச்சத்தில் மக்கள்

வல்டிவியா:

பொறுத்தார் பூமி ஆழ்வார் என்கிறது பழமொழி. ஆனால் அந்தப் பூமியே பொறுமை 1960-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி பிற்பகல் 3:11 மணிக்கு பொறுமையை இழந்தது. 

அன்று உலகின் மொத்த பார்வையும் தெற்கு சிலியின் Valdivia பகுதி மீது திரும்ப அங்கு ஏற்பட்ட உலகின் சக்தி வாய்ந்த நிலநடுக்கமே காரணம்.

இது வரலாற்றில் பதிவான மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கமாக இன்றளவும் கருதப்படுகிறது.

சுமார் பத்து நிமிடங்களுக்குக் குறைவாகவே ஏற்பட்ட 9.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் என்றாலும் அதன் தாக்கம் இன்னும் நூற்றாண்டுகள் வரை பேசப்படும் அளவிற்கு கடுமையானது. 

இந்தச் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 1655 பேர் உயிரிழந்த நிலையில் 3000 மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

அதுமட்டுமல்லாமல், 20 லட்சம் மக்கள் தங்களின் வீடுகளை இழந்து திக்கற்று நின்றனர். 

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி அலை ஏற்பட்டது. இந்தச் சுனாமி பசிபிக் மண்டலத்தின் வெவ்வேறு பகுதிகளைத் தாக்கின.

குறிப்பாக, ஹவாய்  கடற்கரை பகுதிகள்வ் ஜப்பான் மற்றும் பிலிப்பீன்ஸ் போன்ற நாடுகளும் பாதிக்கப்பட்டன. 

1960-ஆம் ஆண்டு சிலியில் ஏற்பட்ட உலகின் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்றளவும் அந்நாட்டு மக்களின் மனதிலும், நினைவுகளிலும் நீடித்த வலியாக உள்ளது. 

அழிவின் இடைவெளியில் சிலி மக்களிடையே அத்தருணம் இருந்த மனித உறுதி, நிலநடுக்கத்தை விட வலிமையானது என்பதை மறுக்க இயலாது. 

- அஸ்வினி செந்தாமரை

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset