
செய்திகள் உலகம்
பாகிஸ்தான் வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க மேலும் ஒரு மாதம் தடை
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்ட தடை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
ஒரே நேரத்தில் ஒரு மாதத்திற்கு மேல் வான்வெளி கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது என்பதால், கடந்த மாதம் பாகிஸ்தான் விதித்த தடை மே 23-ஆம் தேதி வரை அமலில் உள்ளது.
இந்த நிலையில் அந்தத் தடையை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டது.
முன்னதாக, காஷ்மீரின் பஹல்கமில் ஏப்ரல் 22-ம் தேதி நடந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை அறிவித்தது.
இதற்கு போட்டியாக, தனது வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதித்து பாகிஸ்தான் அறிவித்தது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 22, 2025, 7:31 pm
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 2 இஸ்ரேலியத் தூதரக ஊழியர்கள் மரணம்
May 22, 2025, 12:29 pm
எங்கள் குழந்தைகள் மெதுவாகச் சாகிறார்கள்: பலஸ்தீன பெற்றோர் கண்ணீர்
May 22, 2025, 10:10 am
1655 உயிர்களின் அழுக் குரலால் மௌனமானது சிலி: 65 ஆண்டுகள் கடந்தும் அச்சத்தில் மக்கள்
May 21, 2025, 3:57 pm