நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் முஸ்லிம் விவகாரங்களுக்கான அமைச்சராக ஃபைஷல் இப்ரஹிம் நியமனம்: பிரதமர் வோங் அறிவிப்பு

சிங்கப்பூர்:

இணைப் பேராசிரியர் ஃபைஷல் இப்ரஹிம் (Faishal Ibrahim) முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சராகப் பதவியேற்கவிருக்கிறார் என்று சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்தார்.

தற்போது அந்தப் பொறுப்பில் இருக்கும் மசகோஸ் ஸுல்கிஃப்லி (Masagos Zulkifli) ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அதிலிருந்து விலகுகிறார்.

முஸ்லிம் சமூகத்துக்கான தலைமைத்துவத்தைப் புதுப்பிக்க இது சரியான நேரம் என்று பிரதமர் வோங் கூறினார்.

புதியவர்களும் இளையர்களும் தலைமைத்துவத்தை ஏற்றுச் சமூகத்துடன் நெருங்கி உறவாட இது நல்ல வாய்ப்பு என்றார் அவர்.

மசகோஸ் நிறுவிய பல்வேறு திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி அவற்றுக்கு வலுசேர்க்கும் பணிகளில் தாம் ஈடுபடவுள்ளதாக இணைப் பேராசிரியர் ஃபைஷல் கூறினார்.

- ரோஷித் அலி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset