நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அடுத்த 48 மணி நேரத்தில் காசாவில் 14,000 குழந்தைகள் உயிரிழக்க நேரிடும்: ஐ.நா செயலாளர் டாம் பிளெட்சர் 

காசா: 

இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலில் சிக்கி இருக்கும் பாலஸ்தீனத்தின் காசாவுக்குள் மூன்று மாதங்களாக சுமார் 20 லட்சம் பேர் பஞ்சத்தின் ஆபத்தில் இருக்கிறார்கள் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

காசாவுக்குள் உணவு, மருந்து பொருள்கள், எரி பொருள்கள் செல்லுவதை இஸ்ரேல் இராணுவம் தடுத்த நிலையில், இந்த வாரத்தின் தொடக்கத்தில் குறைந்த அளவு மனிதாபிமான உதவிகள் செல்வதற்கு இஸ்ரேல் அனுமதி அளித்தது. உதவிகள் காசாவுக்குள் நுழையத் தொடங்கி இருக்கும் நிலையில், இஸ்ரேல் படைகளின் கெடுபிடிகளால் புதிய பொருள்கள் தேவைப்படும் மக்களைச் சென்று சேர்வதில் தொடர்ந்து சிக்கல் நீடிப்பதாக ஐ.நா செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

14,000 குழந்தைகளின் உயிர்களுக்கு ஆபத்து 

இதனிடையே, காசாவில் அடுத்த 48 மணி நேரத்தில் மனிதாபிமான உதவிகள் சென்று சேராவிட்டால், 14,000 குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. 

மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா செயலாளர் டாம் பிளெட்சர் நேற்று சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில், "உதவிகளுடன் நாம் அவர்களிடம் சென்று சேராவிட்டால் அடுத்த 48 மணி நேரத்தில் 14,000 குழந்தைகள் உயிரிழக்க நேரிடும்" என்று கூறியிருந்தார்.

பிளெட்சரின் இந்த அறிக்கை விவாதத்தை கிளப்பியிருக்கும் நிலையில், அது பாலஸ்தீனியர்கள் எதிர்கொண்டுவரும் மனிதாபிமான பேரழிவை அடிக்கோடிட்டு காட்டுவதையே நோக்கமாக கொண்டது என்றே கூறப்படுகிறது. என்றாலும், உற்று நோக்கினால் இந்த எண்ணிக்கை உடனடி இறப்பு என்பதைத் தாண்டி, நீண்டகால கணிப்பை அடிப்படையாக கொண்டது என்றும் கூறப்படுகிறது.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset