
செய்திகள் உலகம்
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 2 இஸ்ரேலியத் தூதரக ஊழியர்கள் மரணம்
வாஷிங்டன்:
அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 இஸ்ரேலியத் தூதரக ஊழியர்கள் மாண்டனர்.
யூத அருங்காட்சியகத்துக்கு வெளியே ஒரு நிகழ்ச்சியின்போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
மாண்டவர்களில் ஒருவர் ஆண். மற்றொருவர் பெண்.
துப்பாக்கிச் சூடு பற்றித் தமக்கும், குழுவுக்கும் விவரம் வழங்கப்பட்டதாக அமெரிக்க மத்தியப் புலனாய்வுப் பிரிவு இயக்குநர் காஷ் பட்டேல் (Kash Patel) கூறினார்.
சம்பவத்தின் தொடர்பில் ஒரு சந்தேக நபர் தடுப்புக் காவலில் இருப்பதாக வாஷிங்டன் காவல்துறை தெரிவித்தது.
அந்தச் சந்தேக நபர், "பாலஸ்தீனை விடுவியுங்கள்" என்று முழக்கமிட்டதாக காவல்துறைத் தலைவர் சொன்னார்.
ஐக்கிய நாட்டு நிறுவத்துக்கான இஸ்ரேலியத் தூதர் டேனி டேனன் (Danny Danon) அந்தத் தாக்குதல் யூத எதிர்ப்புப் பயங்கரவாதச் செயல் என்று குறிப்பிட்டார்.
அரசதந்திரிகளையும் யூதச் சமூகத்தையும் தாக்குவது சிவப்புக் கோட்டைத் தாண்டும் செயல் என்று அவர் சொன்னார்.
தாக்குதல் பற்றி வாஷிங்டன் காவல்துறை மேல் விவரம் தரவில்லை.
விரைவில் செய்தியாளர் சந்திப்பில் மேலும் விவரங்கள் பகிரப்படும் என்று அது தெரிவித்தது.
ஆதாரம்: Reuters
தொடர்புடைய செய்திகள்
May 22, 2025, 12:29 pm
எங்கள் குழந்தைகள் மெதுவாகச் சாகிறார்கள்: பலஸ்தீன பெற்றோர் கண்ணீர்
May 22, 2025, 12:10 pm
பாகிஸ்தான் வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க மேலும் ஒரு மாதம் தடை
May 22, 2025, 10:10 am
1655 உயிர்களின் அழுக் குரலால் மௌனமானது சிலி: 65 ஆண்டுகள் கடந்தும் அச்சத்தில் மக்கள்
May 21, 2025, 3:57 pm