
செய்திகள் உலகம்
எங்கள் குழந்தைகள் மெதுவாகச் சாகிறார்கள்: பலஸ்தீன பெற்றோர் கண்ணீர்
காஸா:
எங்கள் குழந்தைகள் மெல்ல மெல்ல உயிருடன் சாகிறார்கள் என்று பலஸ்தீன பெற்றோர்கள் பலர் கண்ணீர் விட்டு அழுகின்றார்கள்.
நான்கு குழந்தைகளின் தந்தையான மஹ்முத் அல் ஹாவ் சக பாலஸ்தீனயர்களைப் போலவே போரினால் பாதிக்கப்பட்டுள்ள காசாவின் சூப் கிச்சன் முன்பாக காத்துக் கிடக்கிறார். அங்கிருக்கும் அண்டாவை முன்னும் பின்னும் ஆட்டி தனது குழந்தைகளுக்காக சூப் எடுக்க முயற்சிக்கிறார். மஹ்முத் இதனைத் தினமும் செய்கிறார். ஏனெனில் தனது குழந்தைகளுக்கு போதுமான அளவு உணவு கொடுக்க முடியாமல் போய்விடுமோ என்ற அச்சம் அவரிடம் உள்ளது.
வடக்கு காசாவின் இடிபாடுகளுக்கு இடையே உணவு தேடி அலைகிறார். ஆறுமணி நேரம் காத்திருந்தும் தனது குடும்பத்தினருக்கு போதுமான உணவை திரட்ட அவரால் முடியவில்லை.
"எனக்கு நோய்வாய்ப்பட்ட ஒரு மகள் இருக்கிறாள். அவளுக்கு என்னால் எதுவும் கொடுக்க முடியவில்லை. அங்கு பிரெட் இல்லை,எதுவுமே இல்லை. எல்லோரும் எங்களுடன் நிற்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். எங்களுடைய குழந்தைகள் மெதுவாக இறந்து கொண்டிருக்கிறார்கள்" என்கிறார் வேதனையாக. இது காசாவின் சூடும் நிஜத்தின் ஒரு நிதர்சனம்.
மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க வேண்டும் - போப் லியோ:
இதனிடையே, பாலஸ்தீனப் பகுதிக்குள் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என்று புதிய போப் லியோ வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் பாலஸ்தீனப் பகுதியில் உள்ள நிலைமை இன்னும் கவலை அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
May 22, 2025, 7:31 pm
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 2 இஸ்ரேலியத் தூதரக ஊழியர்கள் மரணம்
May 22, 2025, 12:10 pm
பாகிஸ்தான் வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க மேலும் ஒரு மாதம் தடை
May 22, 2025, 10:10 am
1655 உயிர்களின் அழுக் குரலால் மௌனமானது சிலி: 65 ஆண்டுகள் கடந்தும் அச்சத்தில் மக்கள்
May 21, 2025, 3:57 pm