நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சீனாவில் குத்துச்சண்டை போட்டிக்குத் தயாராகும் ரோபோக்கள்

பெய்ஜிங்:

பயிற்சியில் ஈடுபடும் மனித ரோபோக்களின் விடியோக்கள் இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

சீனாவின் Hangzhou நகரில் மனித ரோபோக்களுக்கு இடையிலான குத்துச்சண்டை போட்டி மே 25 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த குத்துச்சண்டை போட்டிக்காக தீவிர பயிற்சியில் மனித ரோபோக்கள் ஈடுபட்டு வருகின்றன.

இவை இரண்டும் கடினமான நகர்வுகளைச் செய்யும் திறன் கொண்டவை.

போட்டியில் பங்கேற்க ரோபோக்கள் முறையான மேம்படுத்தல்களுக்கு உட்பட்டுள்ளதாக  Unitree Robotics ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

குத்துச்சண்டை போட்டிகள் ஆற்றல் நுகரும் தன்மை கொண்டவை மற்றும் குத்துச்சண்டை வீரர்கள் கடுமையான குத்துக்களுக்கு ஆளாக நேரிடும் என்பதால் சண்டை ரோபோக்கள் அடிகளைத் தாங்கும் திறன் கொண்டது. 

இந்த ரோபோக்கள் மனிதர்களைப் போல குத்துச்சண்டை வீரர்களும் கீழே விழுந்தவுடன் தானாகவே எழுந்து நிற்கும் திறன் கொண்டவை.

இருப்பினும் ரோபோக்களின் சீரான செயல்பாட்டைப் பராமரிப்பது மிகவும் சவாலானது என்று Unitree Robotics தொழில்நுட்ப வல்லுநரான Gao Yuan கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset