நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ரஷியா, ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்த முடியாது: சீனா

வாஷிங்டன்: 

ரஷியா, ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்த முடியாது என்று அமெரிக்காவுக்கு சீனா பதிலளித்துள்ளது.

உக்ரைனுடனான போரை ரஷியா தொடர்ந்து நடத்துவதற்கு கச்சா எண்ணெய் விற்பனை மூலம் கிடைக்கும் நிதியை ரஷியா பயன்படுத்துகிறது என்று அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது.

இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சகம் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், எங்கள் நாட்டில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விநியோகத்தை சீராகவைத்துக் கொள்வது என்பது தேச நலன் சார்ந்த விஷயமாகும். இதில் சீனா உறுதியாக உள்ளது.

நெருக்கடிக்கு உள்ளாக்குவது, ஒரு செயலைச் செய்ய பலவந்தப்படுத்துவது என்பது எந்த பலனையும் அளிக்காது என்று கூறியுள்ளது.

இதன் மூலம் ரஷியா, ஈரானிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை சீனா நிராகரித்துள்ளது.

அதே நேரத்தில் இரு நாடுகள் இடையிலான வர்த்தகம், அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ள 100 சதவீத பதில் வரி நடவடிக்கை ஆகியவை குறித்து பேச தயாராக இருப்பதாக சீனா அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெஸ்ஸன்ட் கூறுகையில், "ரஷியாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வது என்பது தங்கள் நாட்டு இறையாண்மை தொடர்பானது என்று சீனா கூறியுள்ளது.

எனவே, அதில் தலையிட விரும்பவில்லை. அதே நேரத்தில் அமெரிக்கா விதிக்கும் 100 சதவீத வரியையும் அவர்கள் செலுத்திதான் ஆக வேண்டும்' என்றார்.

ரஷியாவிடம் இருந்து அதிகஅளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset