
செய்திகள் மலேசியா
தனது அணியை அறிவித்தார் ரபிசி ரம்லி: சூடுபிடிக்கும் கெஅடிலான் தேர்தல்
ஜொகூர்பாரு:
கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவர் வேட்பாளர் டத்தோஶ்ரீ ரபிசி ரம்லி தனது அணியை அறிவித்ததன் மூலம் கட்சித் தேர்தல் மேலும் பரபரப்பாகி உள்ளது.
கெஅடிலான் உயட்மட்ட தலைவர்களுக்கான தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 48 மணி நேரத்திற்கும் குறைவான நேரமே உள்ளது.
இந்நிலையயில் டத்தோஸ்ரீ ரபிஸி ரம்லி கட்சியின் பல முக்கிய பதவிகளை உள்ளடக்கிய தனது அணியை அறிவித்தார்.
நான்கு உதவித் தலைவர் பதவிகளுக்கு போட்டியிடுவதை உறுதிசெய்த 12 வேட்பாளர்களின் பட்டியலிலிருந்து தனது அணி வேட்பாளர்களான நால்வரின் பெயர்களை அவர் பட்டியலிட்டார்.
அறிவியல், தொழில்நுட்பம், புதுமை அமைச்சர் சாங் லி காங்; இயற்கை வள சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி, நெகிரி செம்பிலான் மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமினுடின் ஹாருன், கெஅடிலான் தலைவரின் அரசியல் செயலாளர் ஜி. மணிவாணன் ஆகியோரே அந்த நால்வராவார்.
மத்திய செயலவை பதவிக்கு அவர் 25 பெயர்களை பட்டியலிட்டார். அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், இளம் தலைவர்கள், பதவியில் இருப்பவர்களும் அடங்குவர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 22, 2025, 1:17 pm
கெஅடிலான் கட்சியின் சீர்திருத்தங்கள் தொடர அனுபவமிக்க, உறுதியான தலைவர்கள் தேவை: குணராஜ்
May 22, 2025, 1:17 pm
ஜாஹிட்டிற்கு எதிரான துன் மகாதீரின் அவமதிப்பு வழக்கு விசாரணை: ஜூலை 21 க்கு ஒத்திவைப்பு
May 22, 2025, 12:08 pm
சமிக்ஞை மேம்படுத்தல் பணிகளால் Komuter, ETS ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படும்
May 22, 2025, 10:55 am
மலாய் பேரணிக்கான அனுமதி விவகாரம்; இன்னும் பேச்சுவார்த்தையில் உள்ளது: போலிஸ்
May 22, 2025, 10:54 am