
செய்திகள் மலேசியா
சமிக்ஞை மேம்படுத்தல் பணிகளால் Komuter, ETS ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படும்
கோலாலம்பூர்:
கெப்போங் மற்றும் சாலாக் செலாத்தான் ரயில் நிலையங்களுக்கு இடையிலான சமிக்ஞை மேம்படுத்தல் பணிகளை மேற்கொள்படுவதால் கிள்ளான் பள்ளத்தாக்கில் Komuter, ETS ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படும் என்று Keretapi Tanah Melayu Berhad (KTMB) நிறுவனம் கூறியது.
மே 24-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை பயணிகள் தாமதத்தை எதிர்நோக்குவார்கள்.
இரயில் சேவை 50 நிமிடங்கள் தாமதமாகும் என்றும் KTMB தனது அறிக்கையில் கூறியது.
Pulau Sebang–Batu Caves–Pulau Sebang மற்றும் Tanjung Malim–KL Sentral–Tanjung Malim இடையிலான ரயில் சேவைகளிலும் மின்சார ரயில் சேவைகளிலும் தாமதம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 24-ஆம் தேதி படாங் பெசார்–சிகாமாட் மற்றும் EG9321 பட்டர்வொர்த்–சிகாமாட் இடையிலான ரயில் சேவைகள் கே எல் சென்ட்ரல் மற்றும் கோலாலம்பூர் நிலையங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டன.
பயணிகளுக்கு உதவ நிலைய பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
பயணிகள் KTMB மொபைல் செயலியில் உள்ள MyRailtime அம்சத்தைப் பயன்படுத்தி முன்கூட்டியே திட்டமிட்டு நிகழ்நேர அட்டவணைகளைச் சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
KTMB இன் அதிகாரப்பூர்வ சமூக ஊடக தளங்கள் வழியாகவும் புதுப்பிப்புகள் பகிரப்படும்.
ஏதேனும் தாமதங்கள் ஏற்பட்டால் முன்கூட்டியே அறிவிக்க பாதிக்கப்பட்ட ETS பயணிகளுக்கு ஒரு SMS எச்சரிக்கை அனுப்பப்படும்.
விசாரணைகளுக்கு, பயணிகள் KTMB வாடிக்கையாளர் சேவை மையத்தை 03-9779 1200 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 22, 2025, 1:17 pm
கெஅடிலான் கட்சியின் சீர்திருத்தங்கள் தொடர அனுபவமிக்க, உறுதியான தலைவர்கள் தேவை: குணராஜ்
May 22, 2025, 1:17 pm
ஜாஹிட்டிற்கு எதிரான துன் மகாதீரின் அவமதிப்பு வழக்கு விசாரணை: ஜூலை 21 க்கு ஒத்திவைப்பு
May 22, 2025, 10:55 am
மலாய் பேரணிக்கான அனுமதி விவகாரம்; இன்னும் பேச்சுவார்த்தையில் உள்ளது: போலிஸ்
May 22, 2025, 10:54 am