நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கேஎல்ஐஏவிலிருந்து கடத்தப்பட்ட 3,000 ஆமைகளுடன் 2 இந்திய நாட்டவர்கள் பெங்களூருவில் கைது

பெங்களூரு:

கேஎல்ஐஏவிலிருந்து கடத்தப்பட்ட கிட்டத்தட்ட 3,000 ஆமைகளுடன் 2 இந்திய நாட்டவர்கள் பெங்களூருவில் கைது செய்யப்பட்டனர்.

அதிகாரிகளின் பல்வேறு எச்சரிக்கைகளுடன் இருந்தபோதிலும் மலேசியாவிலிருந்து குறிப்பாக இந்தியாவிற்கு வனவிலங்குகளை கடத்தும் இடமாக கேஎல்ஐஏ தொடர்ந்து இருந்து வருகிறது.

நேற்று இந்திய சுங்கத்துறையினர் இரவு 10.59 மணிக்கு கேஎல்ஐஏவிலிருந்து இண்டிகோ விமானம் வழியாக இந்தியாவின் பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்த இருவரை கைது செய்தனர்.

அந்த இரண்டு பேரும் கோபிநாத் மணிவேலன், சுதாகர் கோவிந்தசாமி என அடையாளம் காணப்பட்டனர்.

கோபிநாத்தின் பெட்டிகளை சோதனை செய்ததில் 1,672 சிவப்பு காதுகள் கொண்ட ஸ்லைடர் ஆமைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதே நேரத்தில் சுதாகரின் பெட்டிகளை அதே இனத்தைச் சேர்ந்த 1,280 ஆமைகள் இருந்தன.

ஆமைகள்  இன்னும் உயிருடன் இருப்பதாகவும், அடுத்த விமானத்தில் மலேசியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டதாகவும் இந்திய சுங்கத்துறை தெரிவித்தது.

அனுமதியின்றி வனவிலங்குகளை நாட்டிற்குள் கொண்டு வந்ததற்காக இருவரும் அங்குள்ள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக கடந்த மாதம் கேஎல்ஐஏவில்  இருந்து இந்தியாவுக்குச் புறப்படும் வாயிலில் தங்கள் பெட்டிகளில் வனவிலங்குகளைக் கடத்த முயன்றதற்காக இரண்டு இந்திய ஆடவர்களை மலேசிய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

இருவரும் தனித்தனியாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset