நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் ASEAN Malaysia 2025

By
|
பகிர்

ஆசியான் மாநாட்டை முன்னிட்டு கிள்ளான் பள்ளத்தாக்கில் ஆறு நெடுஞ்சாலைகள், 25 முக்கிய சாலைகள் மூடப்படும்: போலிஸ் 

கோலாலம்பூர்:

ஆசியான் மாநாட்டை முன்னிட்டு கிள்ளான் பள்ளத்தாக்கில் ஆறு நெடுஞ்சாலைகள், 25 முக்கிய சாலைகள் மூடப்படவுள்ளன.

புக்கிட் அமான் போக்குவரத்து குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ முஹம்மத் யுஸ்ரி ஹசன் பஸ்ரி இதனை கூறினார்.

ஆசியான் உச்சி நிலை மாநாட்டையொட்டி தலைநகரின்  சீரான போக்குவரத்து வசதியை உறுதி செய்யப்படவுள்ளது.

இதனால் கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள ஆறு நெடுஞ்சாலைகளும் 25 முக்கிய சாலைகளும் வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி மே 28 வரை கட்டம் கட்டமாக மூடப்படும்.

கேஎல்ஐஏ, சுபாங், கேஎல்சிசி மாநாட்டு மண்டபம், இஸ்தானா நெகாரா உட்பட பல ஹோட்டல்களுக்கு செல்லும்  சாலைகளும்   மூடப்படவுள்ளன.

மூடப்படும் சாலைகள் பட்டியல் பின்வருமாறு:

வெள்ளிக்கிழமை முதல் மே 26 வரை (காலை 7 மணி முதல் படிப்படியாக பிரதிநிதிகள் வரும் வரை)

- Lebuh KLIA, Lebuhraya Utara-Selatan Hubungan Tengah (ELITE) (KLIA-Putrajaya), Lebuhraya Baru Lembah Klang (NKVE) (Subang-Jalan Duta), Lebuhraya Koridor Guthrie (GUTHRIE),  Lebuhraya Utara-Selatan (PLUS) (Sg Buloh-Jalan Duta), Lebuhraya Maju (MEX), Lebuhraya Kuala Lumpur-Seremban (Sungai Besi-Pusat Bandar), Lingkaran Putrajaya, Jalan Istana, Jalan Damansara, Jalan Tun Razak, Jalan Ampang, Jalan Sultan Ismail, Jalan Bukit Bintang, Jalan Imbi, Jalan Parlimen, Jalan Kuching.

மே 26 (காலை 8 மணி வரை, மாலை 5.30 மணி வரை, மாலை 7 மணி வரை)

- Persimpangan Jalan Ampang-Jalan P. Ramlee, Persimpangan Jalan Sultan Ismail-Jalan P. Ramlee, Persimpangan Jalan Perak-Jalan P. Ramlee, Persimpangan Jalan Perak-Jalan Pinang, Persimpangan Jalan Stonor-Jalan Kia Peng, Persimpangan Jalan dan Stonor-Persiaran KLCC.

மே 27 (காலை 8 மணி முதல் 10.30 மணி வரை)

- Persimpangan Jalan Ampang-Jalan P. Ramlee, Persimpangan Jalan Sultan Ismail-Jalan P. Ramlee, Persimpangan Jalan Perak-Jalan P. Ramlee, Persimpangan Jalan Perak-Jalan Pinang, Persimpangan Jalan Stonor-Jalan Kia Peng, Persimpangan Jalan Stonor-Persiaran KLCC.

மே 27 (காலை 11.45 முதல் மதியம் 1 மணி வரை)

- Sepanjang Jalan Tun Razak, Sepanjang Jalan Mahameru, Sepanjang Jalan Sultan Abdul Halim

மே 27 (மதியம் 1.45 மணி முதல் 3 மணி வரை)

- Sepanjang Jalan Parlimen-Jalan Kuching, Sepanjang Jalan Sultan Ismail, Persimpangan Jalan Sultan Ismail-Jalan P. Ramlee,  Persimpangan Jalan Perak-Jalan P. Ramlee,  Persimpangan Jalan Perak-Jalan Pinang, Persimpangan Jalan Stonor-Jalan Kia Peng, Persimpangan Jalan Stonor-Persiaran KLCC.

மே 28 (காலை 8 மணி)

- Lebuh KLIA, Lebuhraya ELITE (KLIA -Putrajaya), Lebuhraya NKVE (Subang–Jalan Duta), Lebuhraya GUTHRIE, Lebuhraya PLUS (Sg Buloh-Jalan Duta), Lebuhraya MEX, Lebuhraya KL-Seremban (Sg Besi- Pusat Bandar), Lingkaran Putrajaya, Jalan Istana, Jalan Damansara, Jalan Tun Razak, Jalan Ampang, Jalan Sultan Ismail, Jalan Bukit Bintang, Jalan Imbi, Jalan Parlimen, Jalan Kuching.

மாநாட்டில் பங்கேற்பாளர்கள், விருந்தினர்களின் வாகனம் அல்லது மோட்டார் அணிவகுப்புகள் வாயிலாக  தங்கள் இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கும் வகையில், ஒவ்வொரு மூடலும் 30 நிமிடங்கள் நீடிக்கும்.

ஆகவே பொதுமக்கள் இந்த விவகாரத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று முஹம்மத் யுஸ்ரி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset