நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆசியான் உச்சநிலை மாநாடு: உச்ச நேரங்களில் கூடுதல் ரேபிட் கேஎல் ரயில் சேவைகள் வழங்கப்படும்

கோலாலம்பூர்: 

46-ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டை முன்னிட்டு மே 23-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றி கூடுதல் ரேபிட் கேஎல் ரயில் சேவைகள் செயல்பாட்டில் இருக்கும் என்று  பிரசரானா மலேசியா பெர்ஹாட் தெரிவித்துள்ளது. 

மாநாட்டின் போது சாலை போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கூடுதல் ரயில் சேவை இயக்கப்படவுள்ளது. 

உச்ச நேரங்களில் ரயில் சேவை நேரம் வழக்கமான நாட்களை விட ஒரு மணி நேரம் முன்னதாக செயல்படும் என்று பிரசரானா மலேசியா பெர்ஹாட் தெரிவித்துள்ளது. 

காலை 6.30 மணி முதல் காலை 10 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கூடுதல் இரயில் சேவை இயக்கப்படும். 

அம்பாங்/ஸ்ரீ பெட்டாலிங் வழித்தடத்தில் நான்கு நிமிடங்களுக்கு ஒரு முறை ரயில்கள் இயக்கப்படும்.

குறிப்பிட்ட காலக்கட்டத்தில் பயணிகளின் இயக்கத்தை சீராகச் செய்ய உதவும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் நிலையங்களில் கூடுதலாக  400 ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset