நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டில் ரான்சம்வேர் வழக்குகள் கிட்டத்தட்ட 80 சதவீதம் அதிகரித்துள்ளன: கோபிந்த் சிங்

புத்ராஜெயா:

கடந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் ரான்சம்வேர் வழக்குகள் கிட்டத்தட்ட 80 சதவீதம் அதிகரித்துள்ளன.

இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ இதனை கூறினார்.

ரான்சம்வேர் என்பது ஒரு வகையான இலக்கவியல் வாயிலாக  மிரட்டி பணம் பறிக்கும் சம்பவம் ஆகும்.

இதில் ஹேக்கர்கள் பாதிக்கப்பட்டவரின் தரவை, அது ஒரு தனிநபர் ல்லது நிறுவனமாக இருந்தாலும் அதை மீட்டெடுப்பதற்கு பணத்தை கோருகிறார்கள்.

சைபர் செக்யூரிட்டி மலேசியாவின் தரவுகளின் அடிப்படையில் இந்த சம்பவங்கள் அதிகரிப்பு மிகவும் கவலையளிக்கும் போக்கைக் காட்டுகிறது.

இது இணையக் குற்றங்களை மிகவும் திறம்பட எதிர்த்துப் போராடுவதற்கு முழுமையான, ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கோரினார்.

உலகின் அதிநவீன வளர்ச்சி, இணைய குற்றங்கள் அடிக்கடி நிகழ வாய்ப்புகளைத் திறந்து வைப்பதாகக் காணப்பட்டதே இதற்குக் காரணம்.

இன்றைய இணைய அச்சுறுத்தல்கள் பெருகிய முறையில் அதிநவீனமானவை, எல்லையற்றவை ஆகும்.

ரான்சம்வேர் தாக்குதல்கள், தரவு மீறல்கள், சைபர் அடிப்படையிலான மோசடி ஆகியவை  தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset