நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிறப்பு விகிதம் குறைய என்ன காரணம்? : முனைவர் சத்தியவதி விளக்கம்

கோலாலம்பூர்:

தூக்கம்யின்மை, உடல் பருமன் , உணவு பழக்கம் , மின்னணு பொருட்களின் பயன்பாடு, தாம்பத்திய உறவின் ஈடுபாடு குறைவு , தம்பதிகளிடையே புரிந்துணர்வு குறைவு ஆகிய காரணங்களால் நாட்டின் முதல் காலாண்டில் பிறப்பு விகிதம் 11.5% குறைந்துள்ளதாக மலேசியக் கருவூல மற்றும் குடும்ப மேம்பாட்டு சங்கத்தின் தலைவியான முனைவர் சத்தியவதி தெரிவித்தார். 

முன்னதாக, முதல் காலாண்டில் நாட்டில் குழந்தைப் பிறப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்துவிட்டதாகப் புள்ளியியல் துறை (டிஓஎஸ்எம்) தெரிவித்தது. 

இந்நிலையில், தற்போதைய சூழலில் ஆண் பெண் இரு தரப்பினரும் தங்களின் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்வதில் கவனம் செலுத்துவதால் அவர்கள் தாமதமாகத் திருமணம் செய்கின்றனர். 

தாமதமாகத் திருமணம் செய்வதால் குழந்தை பெறுவதில் தம்பதிகள் சிக்கலை எதிர்நோக்குவதாகவும் முனைவர் சத்தியவதி குறிப்பிட்டார்.

அதுமட்டுமல்லாமல், நம் நாடு பொருளாதார ரீதியாக வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் போது குழந்தைகள் வளர்ப்பதற்கான செலவுகள் அதிகரிப்பதும் பிறப்பு விகிதம் குறைவதற்கு ஒரு முதன்மை காரணமாக விளங்குவதாக முனைவர் சத்தியவதி குறிப்பிட்டார். 

செலவுகள் அதிகரிப்பதால் திருமணமான தம்பதிகள் அதிகமான குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள எண்ணம் கொள்ளவில்லை என்றார் அவர். 

மேலும், அரசாங்கமும் சமூகமும் பெண்களுக்கான தாய்மைக்கான செலவைக் கணிசமாகக் குறைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பிறப்பு விகிதத்தை உயர்த்த அரசாங்கமும் அரசு சாரா இயக்கமும் இணைந்து கருவுறுதல் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று  முனைவர் சத்தியவதி கேட்டுக் கொண்டார். 

அதுமட்டுமல்லாமல், திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை இல்லாத தம்பதிகள்  கருவுறுதல் மையத்திற்கு சென்று ஆலோசனைகளைப் பெறலாம் என்று அவர் குறிப்பிட்டார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset