நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா ஏர்லைன்ஸ், ஏர் ஏசியா ஆகியவை உள்ளூர் மக்களுக்குப் பயணத்தை எளிதாக்க வழிகாட்டுதல்களைப் புதுப்பிக்கின்றன

கோலாலம்பூர்: 

மலேசியா ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் ஏசியா ஆகியவை தென்கிழக்கு ஆசியாவின் பெயர் மரபுகளுக்கு ஏற்றவாறு விமான முன்பதிவுகளுக்கு தங்கள் பெயர் நுழைவு வழிகாட்டுதல்களை புதுப்பித்துள்ளது.

விமான நிறுவனங்களின் கூற்றுப்படி, இந்த மாற்றங்கள் பாரம்பரிய மேற்கத்திய வடிவங்களைப் பின்பற்றாத பெயர்களால் ஏற்படும் குழப்பத்தைத்  தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கடந்த காலங்களில் விமானங்களின் செக்-இன் போது மலேசிய பெயர்கள் சிக்கல்களை ஏற்படுத்தி உள்ளன, முக்கியமாக தனித்துவமான பெயர்கள் மரபுகள் மற்றும் மலேசிய பாஸ்போர்ட்டுகள் இயந்திர வாசிப்புக்கு ஏற்ப  (எம். ஆர். இசட்) உள்ள பெயர்கள் மற்றும் குடும்பப் பெயர்களை  பிரிப்பதின் சிக்கல் காரணமாக.

இது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதிலும்,  உள்ளே நுழையும் போதும், குறிப்பாக மலேசியாவுக்கு வெளியே உள்ள விமான நிறுவனங்களுடன் குழப்பங்களுக்கும் பிழைகளுக்கு வழிவகுத்துள்ளது.

மலேசியா ஏர்லைன்ஸ் இப்போது பெயர்களை” முதலில் உள்ள பெயர்’ அடுத்து ” தந்தை அல்லது குடும்ப பெயர் ” ஆகியவற்றில் பிரிக்கிறது

ஏர் ஏசியாவும்  இதே போன்ற வடிவமைப்பை   பயன்படுத்துகிறது, பெயரின் முன் பகுதியையும் மற்றும் அதன் பின் தந்தை அல்லது /குடும்பப்பெயர்” என்று பிரிக்கிறது.
திருத்தப்பட்ட அமைப்புகள் இப்போது மலேசியர்கள், சீனர்கள், இந்தியர்கள், பிலிப்பினோ க்கள், தாய் மற்றும் வியட்நாமியர்கள் தோற்றம் உட்பட பரந்த அளவிலான பெயர்களின் மரபுகளை அங்கீகரிக்கின்றன.

மலேசியா ஏர்லைன்ஸ் தளத்தின் ஸ்கிரீன் ஷாட் பெயர்களின் உள்ளீடுகளுக்கு உங்கள் வழிகாட்டியைக் காட்டுகிறது.

மலேசியா ஏர்லைன்ஸின் விதிகளின்படி, “வின்சென்ட் டான் மிங் பான்” போன்ற பெயர்கள் “டான்” என்ற குடும்பப் பெயராலும், பிறகு பெயரால் “மிங் பான் வின்சென்ட்” என்றும் பிரிக்கப்படுகின்றன.
இதேபோல், “ஃபூ மேய் மேய்” போன்ற சந்தர்ப்பங்களில், “ஃபூ” என்பது குடும்பப் பெயர் மற்றும் “மேய் மேய்” என்பது அடுத்த பெயராகவும்.

“பின்” அல்லது “அனக்” என்ற பெயர்களைக் கொண்ட பயணிகள் இப்போது “முகமது அலி அகமது பின் முகமது அபு” என்ற உதாரணத்தில் காட்டப்பட்டுள்ளபடி, அந்த பெயர்களை குடும்பப் பெயரில் இடம்பெற செய்துள்ளது.

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset