
செய்திகள் மலேசியா
பாராங்கத்தியைக் கொண்டு ஆடவரைத் தாக்கிய கும்பல்: மேலும் ஐந்து சந்தேக நபர்கள் கைது
கோலாலம்பூர்:
கடந்த வியாழக்கிழமை, ஜாலான் ராஜா உடாவில் உள்ள உணவகத்தில் ஆடவர் ஒருவர் முகமூடி அணிந்த கும்பலால் பாராங்கத்தியைக் கொண்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஐந்து பேர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டனர்.
பினாங்கு மாநிலத்தில் 30 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக வட செபராங் பிறை மாவட்ட இடைக்கால காவல்துறை தலைவர் C. தர்மலிங்கம் கூறினார்.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 326இன் கீழ் இந்த சம்பவம் விசாரணை செய்யப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது பிரம்படிகள் விதிக்கப்படும்.
முன்னதாக, கடந்த வியாழக்கிழமை மாலை 7.20 மணியளவில் ஆடவர் ஒருவர் முகமூடி அணிந்த கும்பல் பாராங்கத்தியால் தாக்கப்பட்டார்.
பாதிக்கப்பட்ட நபர் அருகிலுள்ள கிளினிக்கிற்கு சென்று சிகிச்சை பெற்ற நிலயில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 20, 2025, 4:30 pm
ஹஜ் பெருநாளை முன்னிட்டு 100 மாடுகளைப் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் தானமாக வழங்குகிறார்
May 20, 2025, 4:10 pm
ஆசியான் உச்சநிலை மாநாடு: உச்ச நேரங்களில் கூடுதல் ரேபிட் கேஎல் ரயில் சேவைகள் வழங்கப்படும்
May 20, 2025, 4:09 pm
சிலாங்கூரில் மின்னியல் சிகரெட்டுகளுக்கன விளம்பரங்களுக்குத் தடை
May 20, 2025, 4:03 pm
பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு முத்தமிழ் விழா
May 20, 2025, 12:49 pm