நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அனைத்துலக புத்தகக் கண்காட்சியில் 42ஆவது ஆண்டாக குயில் நிறுவனம் பங்கேற்கிறது: டத்தோ செல்வராஜ்

கோலாலம்பூர்:

அனைத்துலக புத்தகக் கண்காட்சியில் 42ஆவது ஆண்டாக குயில் நிறுவனம் பங்கேற்கிறது.

அந்நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு. செல்வராஜ் இதனை தெரிவித்தார்.

உலக வாணிப மையத்தில் வரும் மே 23ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 42 ஆம் ஆண்டு அனைத்துலக புத்தக கண்காட்சி விழா மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.

இந்த அனைத்துலக புத்தக கண்காட்சி விழாவில் குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் புத்தகங்கள் இடம் பெறுகிறது.

தொடர்ந்து 42 ஆவது ஆண்டாக இந்த புத்தக கண்காட்சி விழாவில் குயில் ஜெயபக்தி பங்கேற்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

இம்முறை 258 நிறுவனங்களின் புத்தகங்கள் கண்காட்சியில் இடம் பெறுகின்றன. மேலும் 1,200 புத்தக முகப்பிடங்கள் அமைக்கப்படுகிறது.

இதில் ஒரே தமிழ் புத்தகக நிறுவனம் குயில் ஜெயபக்தி மட்டுமே என்று அவர் கூறினார்.

ஆரம்பப் பள்ளி முதல் இடைநிலை பள்ளி வரை பயிலும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் இந்த கண்காட்சியில் இடம் பெறுகிறது.

மலேசிய மற்றும் தமிழ் நாட்டு எழுத்தாளர்களின் படைப்புகள், நாவல்கள், சிறுகதைகள் , தன்முனைப்பு, கவிதைகள் இந்த புத்தக கண்காட்சியில் இடம் பெறுவதால் பொதுமக்கள் தங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை ஒரே இடத்தில் வாங்கி கொள்ளலாம்.

மும்மொழி அகாராதி, திருக்குறள், வரலாற்று நாவல்கள் இங்கு விற்பனையில் உள்ளன என்று அவர் சொன்னார்.

அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற தமிழ் புத்தக கண்காட்சியில் குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் புத்தகங்கள் இடம் பெற்றன.

சிங்கப்பூர் தமிழர்கள் அதிக அளவில் புத்தக கண்காட்சிக்கு வருகை தந்து புத்தகங்களை வாங்கி சென்றது பெரும் மகிழ்ச்சியை அளித்தது.

அதேபோல் புத்ரா உலக வாணிப மையத்தில் பத்து தினங்களுக்கு நடைபெறும் அனைத்துலக புத்தக விழாவில் அதிகமான மலேசிய இந்தியர்களின் வருகையை எதிர்பார்க்கிறோம் என்று இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset