நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அசாம் பாக்கியை ராஜினாமா செய்ய சொல்வதற்கு பதிலாக அன்வாரை ராஜினாமா செய்ய வலியுறுத்தலாம்: ஜைட்

கோலாலம்பூர்:

அசாம் பாக்கியை ராஜினாமா செய்ய சொல்வதற்கு பதிலாக அன்வாரை  ராஜினாமா செய்ய வலியுறுத்த வேண்டும்.

முன்னாள் சட்ட அமைச்சர் ஜைட் இப்ராஹிம் இவ்வாறு கூறினார்.

எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அசாம் பாக்கியின் ஒப்பந்த நீட்டிப்புக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஆனால் இந்த எதிர்ப்பு தவறான இலக்கை நோக்கி உள்ளது.

டான்ஶ்ரீ அசாம் பாக்கியை ராஜினாமா செய்ய சொல்வது தவறான குறிவைக்கும் நடவடிக்கையாகும்.

அதற்கு பதிலாக  அவர்களின் கோபத்தை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மீது  காட்ட வேண்டும். அவரை பதவி விலகச் சொல்லி வலியுறுத்த வேண்டும்.

பிரதமர் மீண்டும் மீண்டும் பதவி நீட்டிப்புகளுக்கு தகுதியானவர் என்று நினைத்தால், அசாம் பாக்கி தவறு செய்யவில்லை என்று தான் அர்த்தமாகிறது என்று ஜைட் இப்ராஹிம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset