நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஸ்பா உரிமையாளர் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பத்தில் தொடர்புடைய  சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்: போலிஸ்

பாச்சோக்:

பெரிஸ் குபு பெசாரில் உள்ள ஸ்பாவின் உரிமையாளர் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் சந்தேக நபரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

பாச்சோக் மாவட்ட போலிஸ் தலைவர் முகமது இஸ்மாயில் ஜமாலுடின் தெரிவித்தார்.

இந்த வழக்கு தொடர்பாக  போலிசார் புதிய தடயங்களைக் கண்டறிந்துள்ளது. ஆனால் கூடுதல் விவரங்களை இன்னும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை.

போலிசார் சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ளது. பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள், சாட்சிகளிடமிருந்தும் வாக்குமூலங்களை எடுத்துள்ளோம் என்று அவர் கூறினார்.

கடந்த சனிக்கிழமை நடந்த சம்பவத்தில் ஸ்பா உரிமையாளர் நோர் ஃபசிரா முடா மீது மூன்று நபர்கள் ஆசிட் வீசியுள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்டவருக்கு ஆறு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset